உதவி:சிறு தொகுப்பு

(விக்கிப்பீடியா:சிறு தொகுப்புகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குறுக்கு வழி:
WP:MINOR

இது ஒரு சிறுதொகுப்பு பெட்டியில் குறியிடுவதன் மூலம் நடப்பு பதிப்பிற்கும் முந்தைய பதிப்பிற்கும் மேலோட்டமான வேறுபாடுகளே உள்ளன: எழுத்துப்பிழை திருத்தம், வடிவமைப்பு, மொழிநடை, பொருளடக்கம் மாற்றாது பத்தி சீரமைப்பு முதலியன. ஓர் தொகுப்பாளர் தமது மாற்றங்கள் மீள்பார்வையிடத் தேவையற்றது எனவும் அம்மாற்றங்களால் சர்ச்சைகள் எதுவும் எழ வாய்ப்பில்லை எனவும் கருதும்போதே அதனை சிறு தொகுப்பு எனக் குறிப்பிட வேண்டும். இத்தகைய தொகுப்புகள் பக்கத்தின் மாற்ற வரலாற்றில் "சி" என்று தடித்த எழுத்தில் காண்பிக்கப்படும் (சி).

இதற்கு மாறாக, ஓர் பெரும் தொகுப்பு மற்ற தொகுப்பாளர்களால் மீள்பார்வையிட்டு உடன்பட வேண்டிய ஒன்றாகும். ஆகவே ஓர் கட்டுரையின் பொருளை பெரிதும் மாற்றக்கூடிய தொகுப்பு, அது ஒரு சொல்லாக இருப்பினும் சிறு தொகுப்பு அல்ல. எடுத்துக்காட்டாக, "இல்லை" என்ற சொல்லை சேர்ப்பதோ எடுப்பதோ அந்த வரியின் பொருளை முற்றிலும் மாற்றக்கூடியதாகையால் அத்தகைய தொகுப்பு பெருந்தொகுப்பாகக் கருதப்படும்.

பெருந்தொகுப்பிற்கும் சிறு தொகுப்பிற்கும் உள்ள வேறுபாடு மிக முக்கியமானது; தொகுப்பாளர்கள் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் சிறுதொகுப்பு என குறிப்பிடப்பட்டவையை மீள்பார்வையிடத் தவிர்த்து விடுவார்கள். உட்பதிகை செய்த பயனர்கள் சிறு தொகுப்புகளைக் காட்டாதிருக்கத் தங்கள் விருப்பத்தேர்வுகளில் தெரிந்திருக்கலாம். வேறொரு தொகுப்பாளர் எதிர்ப்பார் எனத் தெரிந்தால் அதனை சிறு தொகுப்பாக இடாது இருத்தல் நன்னெறியாகும்.

விக்கிப்பீடியாவில் உட்பதிகை செய்யாத பயனர்களால் சிறு தொகுப்பு எனக் குறியிட இயலாது. இது விசமிகளின் தொகுத்தலைக் கண்காணிக்கவே செய்யப்பட்டுள்ளது. சிறு தொகுப்பு எனக் குறியிடும் வசதி பெறுவது பதிவு செய்து கொள்ள ஓர் முதன்மைக் காரணமாகும்.

சிறு தொகுப்பு என அடையாளம் செய்தல்

தொகு
 
"சிறு தொகுப்பு"

ஒரு பக்கத்தைத் தொகுக்கும்போது, குறிப்பிட்ட தொகுப்பை இது ஒரு சிறு தொகுப்பு என அடையாளப்படுத்துவதற்கான சிறு பெட்டி ஒன்றை தொகுப்புப் பெட்டிக்கு கீழே காணலாம். செய்யப்பட்ட மாற்றங்களைச் சேமிப்பதற்கு முன்னர், அந்தப் பெட்டியில் புள்ளியிடுவதன் மூலம், செய்யப்பட்ட மாற்றம் ஒரு சிறு தொகுப்பு மட்டுமே என அடையாளம் செய்யலாம்.

சிறு தொகுப்புக்களாவன

தொகு

சிறு தொகுப்புக்கள் எனப்படுபவை எழுத்துப் பிழைகள், கட்டுரையை வடிவமைத்தல், உரையில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யாது அதன் ஒழுங்கமைப்பில் சிறிய மாற்றங்களைச் செய்தல் போன்றவையாகும்.

  • எழுத்துப் பிழைகள்
  • இலக்கணப் பிழைகள்
  • எளிய வடிவமைப்பு மாற்றங்கள் (எ.கா. நிறுத்தற் குறியிடல், அடைப்புக் குறிகளிடல், சாய்ந்த எழுத்துக்களிடல், தடித்த எழுத்துக்களிடல், ஆங்கிலச் சொற்களில் முகப்பெழுத்து ஆக்கம் போன்றன)
  • உரையின் பொருளை மாற்றாத வடிவமைப்பு மாற்றங்கள் (எ.கா. சர்ச்சைக்குட்படாதபடி படிமங்களின் இடத்தை மாற்றல், பத்திகளைப் பிரித்தல் அல்லது சேர்த்தல் அல்லது இடம் மாற்றல்)
  • உண்மைச் செய்திகளில் தெளிவாகத் தெரியும் தவறுகள் (எ.கா. சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1950) என்று காணப்பட்டால், அதனை சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921) என மாற்றுவது).
  • பக்கத்திலுள்ள அமைவிடத் தவறுகளைத் திருத்தல்
  • விக்கிகளுக்கிடையான இணைப்புக்களை ஏற்படுத்தல் அல்லது தவறான இணைப்புக்களை மாற்றல்
  • தவறான உள், வெளி இணைப்புக்களை சரி செய்தல்
  • மேற்கோள் இணைப்புக்களில் தவறிருப்பின் அவற்றைச் சரி செய்தல்
  • நாசவேலைகளை (vandalism) நீக்குதல்

சிறு தொகுப்பல்லாதவை

தொகு

ஏனைய பயனர்களின் பார்வைக்கு உட்பட வேண்டிய, அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய தொகுப்புக்கள் சிறிய தொகுப்புக்களாகக் கருதப்பட முடியாதவையாகும். எனவே ஒரு பக்கத்தில் உள்ள உரையின் பொருளை மாற்றக் கூடிய தொகுப்புக்கள், அவை மிகச் சிறிய மாற்றமாக இருப்பினும், அவற்றைச் சிறு தொகுப்பாக அடையாளப்படுத்தக் கூடாது. எடுத்துக்காட்டாக, 'வேறுபாடு உண்டு' என்பதை 'வேறுபாடு இல்லை' என மாற்றும்போது ஒரே ஒரு சொல்லே மாறினாலும் பொருள் எதிர் மறையாகி விடுகின்றது. சில சமயங்களில் ஒரு சொல்லிலேயே சில எழுத்துக்களை மாற்றினால் வேறு பொருள் வந்துவிடும். எனவே அவற்றைக் கருத்தில் கொள்ளல் வேண்டும். குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்களைச் செய்துவிட்டு, அதனைச் சிறு தொகுப்பு என அடையாளப்படுத்தல் தவறான நடத்தையாகக் கருதப்படும். முக்கியமாக உரையின் குறிப்பிட்ட பகுதியை நீக்கிவிட்டு இது ஒரு சிறு தொகுப்பு என அடையாளப்படுத்தல் கூடாது.

  • ஒரு பக்கத்தில் உரைகளை இணைத்தல் அல்லது நீக்குதல்
  • ஒரு பக்கத்தில் குறிச்சொற்கள் அல்லது வார்ப்புருக்களை இணைத்தல் அல்லது நீக்குதல்
  • ஒரு பக்கத்தில் மேற்கோள்கள் அல்லது வெளியிணைப்புக்களை இணைத்தல் அல்லது நீக்குதல்
  • பேச்சுப் பக்கங்களிலோ அல்லது வேறு விவாதங்கள், கலந்துரையாடல்களிலோ கருத்துக்களை இடுதல்
  • நாசவேலைகள் இல்லாதவிடத்து ஒரு பக்கத்தை மீளமைத்தல்

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதவி:சிறு_தொகுப்பு&oldid=4139400" இலிருந்து மீள்விக்கப்பட்டது