விக்கிப்பீடியா:சூன் 13, 2009 வலைப்பதிவர்களுக்கான விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டம்

விக்கிப்பீடியாவுக்குத் தமிழ் வலைப்பதிவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்புகளை விளக்கி ஒரு கூட்டம் நடைபெற்றது.

நாள்: சூன் 13, 2009 மாலை 6.30 - 8.30 மணி.

இடம்: கிழக்குப் பதிப்பகம்

முகவரி: New Horizon media, எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018


நிகழ்ச்சி நிரல் தொகு

  1. விக்கிப்பீடியா, துணைத் திட்டங்கள் அறிமுகம்.
  2. விக்கிப்பீடியா தள வசதிகள் அறிமுகம்.
  3. விக்கிப்பீடியாவில் புது கட்டுரை தொடங்குவது எப்படி, படம் சேர்ப்பது எப்படி, பிழை திருத்துவது எப்படி?
  4. பிற கேள்விகள், ஐயங்கள், விமர்சனங்களை முன்வைத்தான உரையாடல்கள்.

முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் தொகு

  1. தமிழ் விக்கிப்பீடியா எழுத்து நடை: கிரந்தக் கொள்கை, இலங்கைத் தமிழ் பயன்பாடு, கலைச்சொல் பயன்பாடு கருத்து வேறுபாடுகள்.
  2. ஆங்கில விக்கிப்பீடியாவில் தமிழ் சமூகம் சார் கட்டுரைகளில் உள்ள விரும்பத்தகா சாய்வு. (குழலியின் வலைப்பதிவு, ஆலமரத்தடியில் நாம் இட்ட கருத்துகளை ஒட்டி பதில் அளித்தேன். தமிழர் நலம் நாடுபவர்கள் மிகுதியாக வந்து தொடர்ந்து பொறுமையோடு பங்களிப்பது ஒரு நல்ல வழிமுறையாகத் தெரிவித்தேன்)
  3. உதவிப் பக்கங்களின் போதாமை. புதுப் பங்களிப்பாளர்களுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற நிலைமை. (இதனை ஒத்துக் கொண்டேன். இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்)

25 பேர் அளவில் கலந்து கொண்டனர். நிகழ்வு மிகுந்த பயன் அளித்ததாகத் தெரிவித்தனர்.

கலந்து கொண்டோர் தொகு

  1. தமிழ் வலைப்பதிவர்கள்: லக்கிலுக், டோண்டு ராகவன், அக்னிபார்வை, Srivathsan முதலியோர்.
  2. கிழக்குப் பதிப்பக எழுத்தாளர்கள் பாலு சத்யா, sujatha, முத்துக்குமார், மருதன்.
  3. குங்குமம், தீக்கதிர் சார்ந்த இதழாளர்கள்.
  4. யக்ஞா - ஆய்வாளர், தமிழ்க் கணிமை ஆர்வலர்.
  5. உமா
  6. நிர்மலா
  7. மற்றும் பலர் :) (செல்வம் தமிழ், உங்களிடம் உள்ள விவரங்களைப் பகிர இயலுமா? நன்றி)


ஒருங்கிணைப்பாளர்கள் தொகு

  1. மருத்துவர். புருனோ
  2. பரிதிமதி
  3. செல்வம் தமிழ்
  4. அருநாடன்
  5. ரவி

நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தொகு

நிகழ்வை முன்மொழிந்து இடம், கருவிகள் ஆதரவு வழங்கிய கிழக்கு பதிப்பகம் நிறுவனத்தாருக்கு நன்றி. குறிப்பாக, பெரும் ஆர்வமும் ஒருங்கிணைப்பும் நல்கிய NHM மென்பொருள் பிரிவு மேலாளர், K. S. Nagarajan.

விளம்பர ஆதரவாளர்கள் தொகு

தங்கள் தளத்தில் அறிவிப்பு தந்து நிகழ்வு பற்றிய தகவலைப் பரப்ப உதவியோருக்கு நன்றி.

கூட்டத்துக்கான அறிமுகம் தொகு

இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்து தமிழ்தான் இணையத்தில் அதிக அளவு இடம் பெற்றிருக்கிறது. 5,000-க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன. ஆனால், இந்தத் தமிழ் உள்ளடக்கம் பெருமளவு பக்கச் சார்புடையதாகவும், கருத்து சார்ந்ததாகவும், அரசியல்-திரைப்படம்-சமையல்-ஆன்மிகம்-கிரிக்கெட் என்று குறுகிய வட்டத்தில் உழல்வதாகவும் உள்ளது. கல்வி நோக்கில் ஒரு தலைப்பு குறித்துத் தேடினால், தகவலை முன்வைத்து நடுநிலையுடன் எழுதப்பட்ட விரிவான கட்டுரைகள் குறைவே.

ஆங்கிலத்தில் இந்தத் தேவையை நிறைவு செய்ய ஏராளமான தளங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது ஆங்கில விக்கிபீடியா. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு கலைக்களஞ்சிய ஆங்கிலக் கட்டுரையைப் புரிந்து பயன்படுத்தும் மக்கள் 30 விழுக்காடாவது இருப்பார்களா என்பது கேள்விக்குரியது.

ஆங்கிலம் போல் தமிழில் ஏராளமான தகவல் தளங்கள் இல்லை. தமிழ் விக்கிபீடியா மட்டுமே ஒரே ஒருங்கிணைந்த தகவல் தளமாக இருப்பதால், தமிழ் விக்கிபீடியாவை வளர்க்க வேண்டியது முக்கியம். கடந்த 5 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ் விக்கிபீடியாவில் 18,000+ கட்டுரைகளே உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்க அளவு குறுங்கட்டுரைகள். இன்னும் பல முக்கிய துறைகளைக் குறித்து அடிப்படைக் கட்டுரைகள்கூட இல்லை. குறைந்தது ஒரு இலட்சம் கட்டுரைகளாவது இருந்தாலே ஒரு குறைந்தபட்ச பயனை நல்க இயலும்.

தமிழ் விக்கிபீடியாவுக்குப் பங்களிக்க இருக்கும் மிகப் பெரிய தடைகள்:

  • கணினியில் தமிழில் எழுதத் தெரியாமை.
  • தமிழில் கோர்வையாகக் கட்டுரை எழுத இயலாமை.
  • இணையம் குறித்த அடிப்படை அறிவின்மை. வலையில் எழுதும் பழக்கமின்மை.
  • சரியான கணினி, இணைய வசதிகள் இல்லாமை.

தமிழ் வலைப்பதிவர்கள், இந்தத் தடைகளைக் கடந்தவர்கள். பல நாடுகளில் இருந்து பல துறைகள் குறித்து எழுதக்கூடியவர்கள். எனவே, வலைப்பதிவர்களிடம் இருந்து பெரிய அளவில் பங்களிப்புகளை எதிர்ப்பார்க்கிறோம். இருப்பினும், ஏறத்தாழ பத்து தமிழ் வலைப்பதிவர்கள் மட்டுமே தமிழ் விக்கிபீடியாவுக்கு பங்களித்து வருகிறார்கள். வலைப்பதிவர்கள் பங்களிப்பதற்கான தடைகள்:

  • பிளாகர், வேர்டுபிரெசு போல மீடியாவிக்கி மென்பொருள் பயன்படுத்த இலகுவாக இல்லாமை.
  • வலைப்பதிந்தால் மறுமொழிகள், நண்பர்கள், ஊடக வாய்ப்புகள் என்று பயன்கள் கிட்டுவது போல விக்கிபீடியாவுக்குப் பங்களிப்பதால் தனக்கு என்ன நன்மை கிடைக்கும் என்ற கேள்வி.
  • விக்கிபீடியா செயல்படும் தன்மை பற்றி தெளிவின்மை. (நான் எழுதும் கட்டுரையை இன்னொருவர் எப்படித் திருத்தலாம், திருத்தினால் நான் எழுதியது வீணாகாதா, விக்கிபீடியா நடுநிலையானதா, மற்ற பங்களிப்பாளர்களிடம் மல்லுக்கட்டி நேரம் போகுமா, ஆங்கில விக்கிபீடியா போல் இங்கும் பிரச்னை வருமா... போன்ற கேள்விகள்.)

வலைப்பதிவர்கள் மனத்தில் இருக்கும் இக்கேள்விகளுக்கு விடை அளிக்கும் முகமாகவும், கூடிய பங்களிப்புகளை வேண்டியும் இந்தக் கூட்டம் நடைபெறும். கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்:

  • விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்.
  • விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவது எப்படி? ஒரு பத்து நிமிட அறிமுகம்.
  • விக்கிபீடியாவுக்கு வலைப்பதிவர்கள் எப்படிப் பங்களிக்கலாம்?
  • கேள்வி-பதில், கலந்துரையாடல்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, மேலதிகப் பயிற்சி பெற விரும்புபவர்கள் சூன் 14, சென்னையில் நடக்கும் விக்கிபீடியா பட்டறையிலும் கலந்து கொள்ள வரவேற்கிறோம். விவரங்களுக்கு விக்கிப்பீடியா:சூன் 14, 2009 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை பார்க்கவும்.