விக்கிப்பீடியா:தனிநபர் தாக்குதல் அல்லது அச்சுறுத்தல், தணிக்கை அச்சுறுத்தல் கொள்கை

விக்கிப்பீடியாவின் உள்ளடக்கமும் செயற்றிட்டங்களும் திறந்த முறையில் கூட்டாக்கமாக பயனர்களால் உருவாக்கப்படுவன. விக்கிப்பீடியாவின் உள்ளடக்கம் செயற்பாடுகளை மேம்படுத்த பல்வேறு கொள்கைகளும் அமைவுகளும் உள்ளன. தரமான மேற்கோள்கள் சுட்டுதல், நடுநிலை நோக்கு, பன்முகப் பார்வைகளுக்கு ஏற்கத்தகு இடம் தருதல் உட்பட்ட கொள்கைகள் உள்ளடக்கங்கள் மேம்பட உதவுகின்றன. நன்னோக்கு, கண்ணியம், கூட்டுச் செயற்பாடு, இணக்க முடிவு, முழுமையான தணிக்கை எதிர்ப்பு ஆகியன செயற்பாடுகள் மேம்பட உதவுகின்றன. உள்ளடக்கமும் செயற்பாடுகளும் தொடர்ச்சியான மேம்பாட்டுக்கு உட்பட்டவையே என்பது விக்கியின் அடிப்படை விழுமியங்களில் ஒன்றாகும்.

எந்த ஒரு கட்டுரை குறித்தும் விக்கிப்பீடியா தனிப்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதோ, வலியுறுத்துவதோ, நடைமுறைப்படுத்துவதோ, தலையிடுவதோ இல்லை. எந்த ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்துக்கும் தனிப்பட்ட விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களோ, நிருவாகிகள்/அதிகாரிகள்/மேலாளர்கள் போன்ற தளப் பராமரிப்பு உதவி செய்யும் பயனர்களோ விக்கிப்பீடியா அறக்கட்டளையின் ஊழியர்களோ பொறுப்பாக மாட்டர்கள்.

விக்கிப்பீடியா எந்த வகையிலும் தனிநபர்கள் அச்சுறுத்தப்படுவதையோ, துன்புறுத்தப்படுத்தப்படுவதையோ, விக்கிப்பீடியா தணிக்கை அல்லது தடை செய்யப்படும் என்று அச்சுறுத்தப்படுவதையோ, தணிக்கை அல்லது தடை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதையோ ஏற்றுக்கொள்வதில்லை; பொறுத்துக்கொள்வதும் இல்லை.

இத்தகைய செயற்பாடுகளுக்கான எடுத்துக்காட்டுகள்:

  • விக்கிப்பீடியா உள்ளடக்கத்தை முன்வைத்து பயனர் மீதோ திட்டத்தின் மீதோ வழக்கு தொடர்வதாகவோ சட்டத்துக்கு அப்பாற்பட்ட மையங்கள் ஊடாகவோ நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தல்
  • விக்கிப்பீடியா தளம் அல்லது குறிப்பிட்ட பக்கங்களை தடை அல்லது தணிக்கை செய்ய முற்படல்
  • விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களின் வாழ்வுக்கும் இருப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அவர்களையோ விக்கிப்பீடியா திட்டத்தையோ சட்டத்துக்கு * எதிரானவர்களாகவும் அத்தகையை இயக்கங்களோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புபடுத்தியும் கருத்திடல்

இத்தகைய செயற்பாடுகள் நோக்கில் விக்கிப்பீடியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்கிறது.

இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் பயனர் கணக்குகள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தடை செய்யப்படும்.

பார்க்க: