விக்கிப்பீடியா:தமிழ் உச்சரிப்புக் கையேடு

இந்த கையேடு தமிழ் எப்படியாக உச்சரிப்பது, அந்த உச்சரிப்பு எவ்வாறு எழுத்துக்கூட்டப்படுகிறது என்பது பற்றியதாகும்.

தமிழ் எழுத்து வழக்கில் பெரும்பாலும் ஒரு சீர்தரம் உண்டு. எனினும் உலகில் பரந்து வாழும் தமிழர்களுக்கிடையே உச்சரிப்பில் வட்டார வழக்கு வேறுபாடுகள் உண்டு. தமிழ் விக்கிப்பீடியாவில் அனைத்து தமிழர்களுக்கும் புரியும் எழுத்து வழக்கே பிற்பற்றப்படுகிறது. இருப்பினும் வட்டார வழக்குகள் சில சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன.

  • ஆள், இடம் பெயர்கள் வட்டார எழுத்துக்கூட்டலை பெரும்பாலும் தழுவுகிறது.
  • வட்டார மொழி வழங்கும் கட்டுரைச் சூழலில் வட்டார எழுத்துக்கூட்டல்கள் பயன்படலாம்.

இந்தியத்தமிழ் --- இலங்கைத்தமிழ்

  1. நடத்து --- நடாத்து
  2. பேசுவது --- கதைப்பது
  3. டிவி --- ரிவி
  4. ஆரக்கல் --- ஓரக்கல்
  5. அக்டோபர் --- ஓக்டோபர்
  6. யார்க் --- யோர்க்
  7. டொரண்டோ --- ரொறன்ரோ
  8. மீட்டர் --- மீற்றர்
  9. நான் போனேன் --- நான் போனனான்
  10. நான் வந்தேன் --- நான் வந்தனான்
  11. அவள் வந்தாள் --- அவள் வந்தவள்
  12. அவங்க சொன்னாங்க \ அவர்கள் சொன்னார்கள் --- அவங்கள் தான் சொன்னவங்கள்
  13. டிக்கெட் --- ரிக்கெற்
  14. மருத்துவமனை --- வைத்தியசாலை
  15. பள்ளிக்கூடம் --- பாடசாலை
  16. பாலிஸ்டர் --- பொலியெஸ்ரர்
  17. பெட்ரோல் --- பெற்றோல்
  18. எலுமிச்சை --- தேசிக்காய்
  19. கொசு --- நுளம்பு
  20. முனைவர் --- கலாநிதி