விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா நூல்கள்
இணையத்தில் இல்லா மக்களையும் சென்றடையும் வகையில் தமிழ் விக்கிப்பீடியாவில் தேர்ந்தெடுத்த சில கட்டுரைத் தொடர்களை சிறு நூல்களாக வெளியிடுவது குறித்த திட்ட விளக்கப் பக்கம். இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான வழிமுறைகளை உரையாடல் பக்கத்தில் பேசலாம்.
பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் போலோ, ஆனந்த விகடன் வெளியிட்ட அதன் சுருக்கிய தமிழ்ப் பதிப்பு போலோ ஒரு நூல் வெளியிடும் அளவுக்கு தமிழ் விக்கி வளர பல ஆண்டுகள் ஆகும். அதே வேளை, விலங்குகள், பறவைகள் போன்ற தலைப்புகளில் பல முழுமையான, நல்ல கட்டுரைகள் உள்ளன. தமிழ் விக்கி தவிர வேறு தமிழ்க் களங்களில் எழுதப்படா கட்டுரைகள் உள்ளன. இவற்றைத் தொகுத்து சிறு சிறு நூல்களாக தொடர்ந்து வெளியிடுவது இயலும்.
வெளியிடக்கூடிய தலைப்புகள்
தொகு- பறவைகள்
- விலங்குகள்
- நாடுகள்
- மொழிகள்
- தனிமங்கள்
- இனங்கள்
- கட்டடக் கலை
- தமிழ்த் திரைப்படங்கள் (2000க்கு மேற்பட்ட படங்கள் பற்றிய சிறு குறிப்புகள் - தரவு நூல்)
- இந்திய ஊர்கள்