விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/அட்டவணை உருவாக்கல்

அட்டவணை எடுத்துக்காட்டு

அட்டவணை என்பது தரவுகளை வரிசைகளிலும் நிரல்களிலும் ஒழுங்குபடுத்தும் ஒரு வழியாகும். இது தரவுகளைத் தொகுத்து வகைப்படுத்தி காட்ட உதவுகின்றது. இவை விக்கிகளிலும் பரவலாகப் பயன்படுகிறன.

நீங்கள் இரண்டு வழிகளில் அட்டவணையை ஒரு பக்கத்தில் சேர்க்கலாம்: விக்கி குறியீடுகளைப் (wiki markup) பயன்படுத்தி அல்லது மீயுரை (எச்.டி.எம்.எல்/HTML) குறியீடுகளைப் பயன்படுத்தி இடலாம். நீங்கள் எச்.டி.எம்.எல் குறியீடுகளை அறிந்திராவிட்டால், மிக எளிதாக விக்கி முறையைப் பயன்படுத்தி அட்டவணை சேர்ப்பதற்கான வழி உள்ளது.

விக்கிக் குறியீட்டு முறையில் அட்டவணை சேர்த்தல்

தொகு
 

ஓர் அட்டவணையைத் தானாகவே உள்ளிட,தொகு கருவிப்பட்டையில்   (அட்டவணையை உள்ளிடு) பொத்தானை சொடுக்கிடுக. கருவிப்பட்டையில் ஒரு வரிசை மட்டும் இருக்குமாயின் மேம்பட்ட என்றதைச் செடுகினால் இரண்டம் வரிசைத் தெரிவுகளைக் காணலாம்.

நீங்கள் அட்டவணையை உள்ளிடு பொத்தானை சொடுக்கி, விருப்பத்தேர்வுகளை (default settings) அப்படியே ஏற்றுக் கொண்டால் கீழ்வரும் அட்டவணை உள்ளிடப்படும்:

{| class="wikitable"
|-
! தலைப்பு எழுத்துக்கள் !! தலைப்பு எழுத்துக்கள் !! தலைப்பு எழுத்துக்கள்
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|}

மேலே உள்ள அட்டவணைக் குறியீடுகள் பின்வருமாறு காட்சி தரும் அட்டவணையை உருவாக்கும்:

 

எடுத்துக்காட்டு உரைகளை உங்கள் தரவுகள் உடன் மாற்றிக் கொள்ளுங்கள். விக்கியில் விக்கிக் குறியீட்டு முறையில் அட்டவணை சேர்த்தலே விரும்பத்தக்கது.

எச்.டி.எம்.எல் குறியீட்டு முறையில் அட்டவணை சேர்த்தல்

தொகு

நீங்கள் எச்.டி.எம்.எல் அறிந்து இருந்தால் அதனைப் பயன்படுத்தி அட்டவணை சேர்ப்பது உங்களுக்கு எளிதாக இருக்கலாம். எச்.டி.எம்.எல் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஒரு அட்டவணையை நீங்கள் விக்கியில் நேரடியாக இணைக்க முடியும்.

<table border="1">
<tr>
<th>தலைப்பு எழுத்துக்கள்</th>
<th>தலைப்பு எழுத்துக்கள்</th>
<th>தலைப்பு எழுத்துக்கள்</th>
</tr>
<tr>
<td>எடுத்துக்காட்டு </td>
<td>எடுத்துக்காட்டு </td>
<td>எடுத்துக்காட்டு </td>
</tr>
<tr>
<td>எடுத்துக்காட்டு </td>
<td>எடுத்துக்காட்டு </td>
<td>எடுத்துக்காட்டு </td>
</tr>
<tr>
<td>எடுத்துக்காட்டு </td>
<td>எடுத்துக்காட்டு </td>
<td>எடுத்துக்காட்டு </td>
</tr>
</table>  

மேலே உள்ள எச்.டி.எம்.எல் அட்டவணைக் குறியீடுகள் பின்வருமாறு காட்சி தரும் அட்டவணையை உருவாக்கும்:

 

மீயுரை கொண்டு அட்டவணைகளை உள்ளிடுவதை விக்கிப்பீடியா விரும்புவதில்லை. இதனைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறீர்கள். ஓர் முழுமைக்காகவே இவை கொடுக்கப்படுகின்றன. எச்.டி.எம்.எல் அட்டவணையை விக்கிக் குறியீடுகளுக்கு மாற்ற http://www.uni-bonn.de/~manfear/html2wiki-tables.php என்ற எச்.டி.எம்.எல் விக்கி மாற்றியைப் பயன்படுத்தலாம்

கூடிய அமைவுகள்

தொகு

நெடுவரிசை அகலத்தை அமைப்பது

தொகு

ஓர் நெடுவரிசையின் அகலம் அதன் உள்ளடக்க உரையின் மிக நீண்ட அகலத்தைப் பொறுத்து அமையாது, நெடுவரிசை அகலத்தை உங்கள் விருப்பம்போல அமைக்க விரும்பினால் கீழ்க்காணும் எடுத்துக்காட்டைப் பின்பற்றவும். உரை தானாகவே அடிதழுவுதல் கட்டாயமாக்கப்படுள்ளது.

விக்கிக் குறியீடு:

{| border="1" cellpadding="2"
!width="50"|பெயர்
!width="225"|தாக்கம்
!width="225"|எந்த விளையாட்டுகளில்
|-
|போக்பால்
|வழமையான போக்பால்
|அனைத்து பதிப்புகளிலும்
|-
|கிரேட் பால்
|போக்பாலைவிடச் சிறந்தது
|அனைத்து பதிப்புகளிலும்
|}

உலாவியில் எவ்வாறு காட்சியளிக்கும்:

பெயர் தாக்கம் எந்த விளையாட்டுகளில்
போக்பால் வழமையான போக்பால் அனைத்து பதிப்புகளிலும்
கிரேட் பால் போக்பாலைவிடச் சிறந்தது அனைத்து பதிப்புகளிலும்

பண்புக்கூறளவுகளை அமைத்தல்

தொகு

கட்டத்தின் துவக்கத்தில் அதன் பண்புக்கூறளவை குறிப்பிட்டு ஓர் தனி '|' (pipe) குறியை இடவும். காட்டாக width=300px| என்று குறிப்பிட்டால் அந்தக் கட்டத்தின் அகலத்தை 300 பிக்செல் அளவிற்கு அமைக்கும். ஒன்றிற்கு மேற்பட்ட கூறளவுகளை அமைக்க ஒவ்வொன்றிற்குமிடையே ஓர் இடைவெளி விடவும்.

விக்கிக் குறியீடு:

{|
|-
| bgcolor=red|கட்டம்1 || width=300px bgcolor=blue|கட்டம்2 || bgcolor=green|கட்டம்3
|}

உலாவியில் எவ்வாறு காட்சியளிக்கும்:

கட்டம்1 கட்டம்2 கட்டம்3

எப்போது அட்டவணைகள் தேவை

தொகு

தரவுகளை கட்டங்களில் கிடை/நெடு வரிசையாக காட்சிப்படுத்த அட்டவணைகள் மிகச் சிறந்தவை. அத்தகைய சில:

  • கணித வாய்பாடுகள்
    • பெருக்கல் வாய்பாடு
    • வகுத்தல் காரணிகள் அட்டவணை
    • லுக் அப் அட்டவணைகள்
  • தகவல் பட்டியல்கள்
    • இரண்டு அல்லது பல மொழிகளில் ஒன்றின் பொருள்
    • நபர், பிறந்தநாள், தொழில்
    • கலைஞர், இசைத்தட்டு, ஆண்டு, பகுப்பு

பல நேரங்களில் பட்டியல்கள் பட்டியல்களாகவே விடப்படுவது சிறப்பாகும். சில கட்டுரைகளில் உள்ள பட்டியல்களை அட்டவணை வடிவில் அமைத்தால் அவற்றின் நீளம் மற்றும் சிக்கலான நிரல் காரணமாக பின்னாளில் தொகுப்பது கடினமாகும். நீங்கள் ஒரு பட்டியலை அட்டவணைப்படுத்துவதற்கு முன்னால் அதனால் காட்சிப்படுத்தல் எளிதில் புரியும் வண்ணம் அமைகிறதா என்று பார்க்கவும். ஆமெனில் அட்டவணைப்படுத்துதல் சிறந்ததாகும். அவ்வாறான பயன் எதுவும் இல்லையெனில், அட்டவணைப் படுத்தாது இருப்பதே நல்லது.

பக்க வடிவமைப்பிற்காக அட்டவணைப்படுத்துதல் கூடாது. நீங்கள் தொகுக்கும் தரவுகள் ஓர் அட்டவணைக்கு சரியானதாக இல்லாவிடில், கட்டாயமாக அட்டவணைப்படுத்துதல் சிறப்பன்று. ஓர் நிழற்படத்தின் தலைப்பினை இட, இணைப்புகளின் தொகுப்பொன்றை சரியாக அமைக்க, பிற காட்சி இனிமைக்காக அட்டவணைப்படுத்தலை செய்யாதீர்கள். இது பிற விக்கிப்பீடியர்களால் தொகுப்பதை கடினமாக்குகிறது.

வரக்கூடிய பிரச்சினைகள்

தொகு

தேவையான இடங்களில் அட்டவணைப் பயன்படுத்தினால் கூட பிரச்சினைகள் எழக்கூடும். நீங்கள் உங்கள் கட்டுரைகளில் அட்டவணைகளைப் பயன்படுத்தினால் கருத்தில் கொள்ள வேண்டிய சில:

  • பிறருக்கு,முக்கியமாக விக்கிப்பீடியாவிற்கு புதியவர்களுக்கு, அட்டவணைகளை தொகுப்பது கடினமாக இருக்கும். "இப்பக்கத்தைத் தொகு" பொத்தானை சொடுக்கி பின்வரும் தொகுப்புப் பெட்டியில் அவர்கள் காண்கின்ற புரியாத மீயுரை வரிகள் அவர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கலாம். உங்கள் அட்டவணைகளை சுருக்கமாகவும் எளிய வரிவடிவைக் கொண்டும் அமையுங்கள். இடையே "<!-- இந்தக் கட்டுரையின் உரையைத் தொகுக்க, அட்டவணையை தாண்டிச் செல்லவும். -->" போன்று (காட்சியில் வராத) விளக்கவுரைகள் கொடுப்பதும் புதியவர்களின் தன்னம்பிக்கைக்கு உதவும்.
  • சிறந்த மீயுரை வல்லுனர்களுக்கும் அட்டவணையை அனைத்து உலாவிகளிலும் சரியாகக் காட்சிபடுத்துதல் கடினமான செயலாகும். ஒரு சிறிய தட்டச்சுப் பிழையும் அட்டவணைக் காட்சியை மிக மோசமாக்கும். இதனைத் தவிர்க்க உங்களால் முடியலாம்; பின்னாள் பயனர்களும் இத்திறனைக் கொண்டிருக்க வேண்டும். சிறிய,எளிய வடிவமைப்பு இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கும்.
  • பெரிய அட்டவணைகள், நிறைய தகவல்களுடன், சிறிய கணித்திரைகளில் வலது புறத்தில் வழிந்தோடும்; இது சில நேரங்களில்,(காட்டாக, தனிம அட்டவணை )எதிர்பார்க்கப்படுவது. ஒரு கட்டுரைக்கு மிகப் பெரிய அட்டவணை உருவாக்க விரும்பினால், கூடவே சிறிய கணித்திரைப் பயனர்களின் நன்மைக்காக சிறிய வடிவில் எளிய அட்டவணையொன்றையும் பதிப்பிக்கவும்.
  • எச்.டி.எம்.எல் சொற்கள் code, pre, அல்லது tt மூலம், அட்டவணையின் உள்ளே மாறா-அகல எழுத்துரு பாவித்திருந்தால் அது பக்கத்தைத் தேவைக்கும் கூடுதலாக அகலமாக்கும். ஆகவே, கூடுமானவரை மாறா-அகல எழுத்துருக்களை பயன்படுத்தாதீர்கள். அதேபோல பிரச்சினை அட்டவணைக்குள் ஓர் படிமத்தை (படிமங்களும் மாறா அகலத்தைக் கொண்டிருப்பதால்) உள்ளிட்டிருந்தாலும் நிகழும்.
  • கூடுதலான தகவல்களைக் கொண்டிருக்கும் கட்டங்களும் சில உலாவிகளில் காட்சிப்படுத்தலை பிரச்சினையாக்கும். முக்கியமாக, ஓர் பெரும் பத்தியை உள்ளடக்கிய கட்டம் உரை மட்டுமே காட்டும் லின்க்ஸ் போன்ற உலாவிகளில் சரியாகக் காட்டப்படுவதில்லை. இது தேவைப்படுவதாக இருக்கலாம், இருப்பினும் முடியுமானால், கட்டங்களில் இடப்படும் தரவுகளின் அளவை மட்டுப்படுத்தவும்.
  • சில உலாவிகளில் வலது புற ஒழுங்கமைந்த அட்டவணைகள் உரையை எல்லைவரை செல்ல அனுமதிக்கும். இது காண்பதற்கு அழகில்லாமல் இருக்கும். இத்தகைய நேரங்களில் அட்டவணைத் தலைப்பில் style = "margin-left: 0.5em;" என்று குறிப்பிடவும்.

மேலதிக தகவல்கள்

தொகு