விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கலைச்சொற்கள்
புதிய கண்டு பிடிப்புகளும் படைப்புகளும் பெருகி வரும் சூழலில் அவற்றைப் பற்றிய செய்திகளை விக்கிப்பீடியாவில் தரும்போது அவற்றுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள் கிடைப்பது என்பது சிறிது இயலாததாகின்றது. துறைசார்ந்த கலைச்சொற்களைப் பொறுத்தவரை கிடைக்கும் அகராதிகளின் அடிப்படையில் கலைச் சொற்கள் சேர்க்கலாம். தமிழ் விக்கியின் மற்றொரு திட்டமான விக்சனரி இத்தேவையை ஓரளவு நிறைவு செய்கிறதெனலாம்.மேலும் விக்கிபீடியாவில் சிறப்பாகவோ/ அதிகமாகவோ பயன்படுத்தும் சொற்களுக்கான பொருளை விக்கிப்பீடியா கலைச் சொல் கையேடு என்ற பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும்
- இலத்திரனியல் நுட்பியல் சொற்கள்
- இலத்திரனியல் எண்ணுதிகள் பட்டியல்
- அடிப்படை வேதியியல் எண்ணக்கரு பட்டியல்
- நிரலாக்கம் கலைச்சொற்கள்
- போரியல் கலைச்சொற்களின் பட்டியல்
- இசம்ஸ் பட்டியல்,
- திறனாய்வுக் கோட்பாடுகளின் பட்டியல்.
- கணிதக் கலைச்சொற்கள் (ஆங்கில அகர வரிசையில்),
- இசைக் கலைச்சொற்கள்
போன்ற சில கலைச் சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பயனர்கள் இவற்றைப் பயன்படுத்தலாம். இயலாத போது அக்கட்டுரையின் பேச்சுப்பக்கங்களில் கலந்துரையாடி புதிய கலைச் சொல்லாக்கத்தைப் பயன்படுத்தலாம்.