விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/பகுதிகளும் பொருளடக்கமும்

பகுதிகள்

தொகு

கட்டுரைகளை பகுதிகளாகப் பிரிக்க தலைப்புக்களைப் பயன்படுத்துங்கள். தலைப்பைத் தனியான வரியில் இடவும். #இரண்டாம் கட்டம்# நிலை இரண்டு தலைப்பை ("==") பெரும்பாலான தொகுப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

நீங்கள் தட்டச்சிடுவது கணித்திரையில் காட்டப்படுவது
==பகுதி தலைப்புகள் ==

''தலைப்புகள்'' உங்கள் கட்டுரையைப் பகுதிகளாக வடிவமைக்கிறது.  
விக்கி மென்பொருள்
அவற்றிலிருந்து தானியக்கமாக  
பொருளடக்க அட்டவணையை
உருவாக்க இயலும். 
இரண்டு 'சமன் குறியீடு'களுடன் ("==") 
துவங்கவும்.


===துணைப்பகுதி===

மேலும் கூடுதலான 'சமன்' எழுத்துருக்கள்
துணைப்பகுதியை உருவாக்குகின்றன.

====மேலும் சிறிய துணைப்பகுதி====
இரண்டிலிருந்து ("==")
நான்கு  ("====") 'சமன்'களைப் போல இடையில் நிலைகளை தவறவிடாதீர்கள், 

;ஓர் வரையறுக்கப்பட்ட சொல்: ஒரு வரியின் 
துவக்கத்தில் இடப்படும் அரைப்புள்ளியானது (;)
ஓர் வரையறையை குறிக்கப் பயனாகிறது.
வரையறுக்கப்படும் சொல் தடித்த எழுத்தில் காட்டப்படும்.
முக்கால் புள்ளிக்கு (:) அடுத்து வருகின்ற வரையறை
இயல்பாக தடித்த எழுத்தில் காட்டப்படுவதில்லை.
இது ஓர் தலைப்பல்ல மற்றும் பொருளடக்க அட்டவணையில்  
தோன்றுவதில்லை.

பகுதி தலைப்புகள்

தலைப்புகள் உங்கள் கட்டுரையைப் பகுதிகளாக வடிவமைக்கிறது. விக்கி மென்பொருள் அவற்றிலிருந்து தானியக்கமாக பொருளடக்க அட்டவணையை உருவாக்க இயலும். இரண்டு 'சமன் குறியீடு'களுடன் ("==") துவங்கவும்.

துணைப்பகுதி


மேலும் கூடுதலான 'சமன்' எழுத்துருக்கள் துணைப்பகுதியை உருவாக்குகின்றன.

மேலும் சிறிய துணைப்பகுதி

இரண்டிலிருந்து ("==") நான்கு ("====") 'சமன்'களைப் போல இடையில் நிலைகளை தவறவிடாதீர்கள்,

ஓர் வரையறுக்கப்பட்ட சொல்
ஒரு வரியின் துவக்கத்தில் இடப்படும் அரைப்புள்ளியானது (;) ஒரு வரையறையைக் குறிக்க பயன்படுகிறது. வரையறுக்கப்படும் சொல் தடித்த எழுத்தில் காட்டப்படும். முக்கால் புள்ளிக்கு (:) அடுத்து வருகின்ற வரையறை இயல்பாக தடித்த எழுத்தில் காட்டப்படுவதில்லை. இது ஓர் தலைப்பல்ல; மற்றும் பொருளடக்க அட்டவணையில் தோன்றுவதில்லை.


'''கிடைமட்டக் கோடு'''

ஓர் கிடைமட்டக் கோட்டால்
வரிகளைப் பிரிக்க:
:இது கோட்டிற்கு மேலே...
----
:...இது கோட்டிற்கு கீழே.
பகுதித் தலைப்பை பயன்படுத்தாவிடின்,
பொருளடக்க அட்டவணையில் இடம் பெறாது.

கிடைமட்டக் கோடு

ஓர் கிடைமட்டக் கோட்டால் வரிகளைப் பிரிக்க:

இது கோட்டிற்கு மேலே...

...இது கோட்டிற்கு கீழே.

பகுதித் தலைப்பை பயன்படுத்தாவிடின், பொருளடக்க அட்டவணையில் இடம் பெறாது.



பொருளடக்க அட்டவணை உள்ளடக்கம்

தொகு

ஒரு பக்கத்திற்கு நான்கு தலைப்புக்களாவது இருந்தால் பொருளடக்க அட்டவணை ஒன்று முதல் தலைப்பிற்கு முன்னதாக (தலைப்பகுதிக்குப் பின்னதாக) தோன்றும். குறிப்பிட்ட பக்கத்தில் எங்காவது __TOC__ என்றிட்டால் பொருளடக்கம் (முதல் தலைப்பிற்கு அடுத்துத் தோன்றுவதற்கு மாற்றாக) இவ்வாறிட்ட இடத்தில் தோன்றும் . இதேபோல __NOTOC__ என்றிட்டால் பொருளடக்கம் தோன்றாது. அகர வரிசைத் தலைப்புக்களுக்கும் ஆண்டுத் தலைப்புகளுக்கும் குறும் பொருளடக்கப் பெட்டி உருவாக்கத்திற்கு உதவிப் பக்கத்தை நாடுங்கள்.