விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடக கருத்தாய்வுக் கேள்விக் கொத்து (வரைவு)

தமிழ் விக்கியூடக திட்டமிடலிலின் முதல் கட்டமாக ஒரு கேள்விக் கொத்தை தயாரித்து, பரந்த பயனர்களிக் கருத்துகளைப் பெறப்படவுள்ளது. அதற்கான கேள்விகளைப் கீழே பரிந்துரையுங்கள். அதி கூடியதாக 20-25 கேள்விகளை எடுத்துக் கொள்ளப்படும்.

  • பரப்புரையில் தமிழ் விக்கிகள் ஒர் உலகளாவிய அணுமுறையைப் பின்பற்ற வேண்டுமா, அல்லது தமிழ்நாடு, வடகிழக்கு ஆகிய பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டுமா?
  • தமிழ் விக்கிகள் ஊழியம் வழங்கப்பட்ட தொகுப்பாளர்களைப் பயன்படுத்தலாமா? (ஆதரவு= 1.த*உழவன்)
  • தமிழ் விக்கியூடகங்கள் நிறுவனமயப்படுத்தினாலும் கிட்டும் நன்மைகள் எவை, தீமைகள் எவை?
  • தமிழ் இணைய சமூகத்திடம் தமிழ் விக்கியைக் கொண்டு செல்ல நாம் என்ன செய்யலாம்? (பரிந்துரை = 1.சிறீகாந்து 2.த*உழவன்)
  • Should we do mass media outreach / content distribution? (Articles on newspapers, printing wiktionary book? ) (சிறீகாந்து பரிந்துரை)
  • நாம் தற்போதைய செயற்படும் பயனர்களைப் எப்படிப் பேணிக் கொள்வது?(பரிந்துரை = 1.சிறீகாந்து 2.த*உழவன்)
  • துறைசார் வல்லுனர்களை மேலும் நாம் எப்படி ஈர்க்கலாம்?
  • நாம் இதுவரை மேற்கொண்ட சமூக வலைப்பின்னலாக்கம் எந்த நிலையில் உள்ளது, எப்படி மேற்படுத்தலாம்? (ஆதரவு = 1.த*உழவன்)
  • எந்த அமைப்புக்களுடன் நாம் கூட்டாக செயற்பட்டால் எமக்கு கூடிய பலங்கள் கிடைக்கும்?
  • அடுத்த ஆண்டு முதிர்ந்த பயனர்களை குறிப்பிட்ட விக்கித்திட்டத்தில் (எகா விக்கி செய்தி, விக்கி நூல்கள்) என்று கேக்கலாமா? (ஆதரவு = 1.த*உழவன்)
  • தமிழ் விக்கிக்கான அச்சுறுத்தல்கள் எவை?

இரவி பரிந்துரைக்கும் கேள்விகள் தொகு

(ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட கேள்விகள் தவிர்த்து)

  • இப்படி ஒரு வியூகத் திட்டமிடலும் அதன் அடிப்படையிலான செயற்பாடும் தேவையா அல்லது வழமை போலவே நாம் தன்னொழுக்காகத் தொகுத்துக் கொண்டும் அவ்வப்போது சிற்சில திட்டங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாமா? (எ.கா: ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு ஒரு வியூகத் திட்டமிடல் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், விக்கிமீடியா நிறுவனம் இவ்வாறு ஒரு ஐந்து ஆண்டுத் திட்டத்ததைத் தயாரித்தது)
  • அப்படி நாம் திட்டமிட்டுச் செயற்படலாம் என்றால் எத்தனை ஆண்டுகளுக்குத் திட்டமிட வேண்டும்? 1, 3, 5?
  • இந்தத் திட்டமிடலின் விளைவாக எத்தனை முக்கிய நோக்குகளை நாம் வரையறுத்துக் கொள்ள வேண்டும்? அவற்றை ஒவ்வொரு ஆண்டும் சம முக்கியத்துவத்துடன் செயற்படுத்துவோமா அல்லது ஒன்றின் பின் ஒன்றாக செயற்படுத்துவோமா? இவற்றுக்கான முன்னுரிமை வரிசை எவ்வாறு இருக்கும்?
  • இத்திட்டமிடலுக்கான வழிமுறை எவ்வாறு இருக்க வேண்டும்? (எடுத்துக்காட்டு)
  • இத்திட்டமிடலுக்காக நாம் எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளலாம்?
  • இந்த வியூகத் திட்டமிடலின் முடிவுகள் பயனர்களின் பங்களிப்பை எவ்வாறு கட்டுப்படுத்த முனையும்? அல்லது, கட்டுப்படுத்த வேண்டுமா? கட்டுப்படுத்துவதற்கான அவசியம் உண்டா? அவ்வாறு செய்வதன் மூலம் வழமையான விக்கிப்பீடியா சமூகத்தில் இல்லாத ஒரு அதிகார அடுக்கோ தேவையற்ற கட்டுப்பாடோ உணரப்படுமா?
  • வியூகத் திட்டமிடலினைச் செயற்படுத்துவதற்கான உறுதியை பங்களிப்பாளர்களிடம் இருந்து எப்படி எதிர்ப்பார்ப்பது?
  • விக்கிமீடியா நிறுவனம், இந்திய விக்கிப்பீடியா கிளை, இந்தியாவில் உள்ள விக்கிமீடியா அலுவலகம் ஆகியவற்றுடனான தமிழ் விக்கித் திட்டங்களின் உறவாட்டம் எவ்வாறு இருக்க வேண்டும்?
  • தமிழ் விக்கித்திட்டங்கள் எதிர்நோக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பச் சிக்கல்கள் என்னென்ன? அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?
  • இணையத்துக்கு வெளியேயான பரப்புரையைத் தொடரும் போது அதனை எவ்வாறு வினைத்திறம் மிக்கதாகச் செய்வது? குறிப்பிட்ட மக்கட் பரப்பினை இலக்கு வைக்கலாமா? எடுத்துக்காட்டுக்கு: இதழியல் / மொழி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், நூலகங்கள் / நூலகர்கள், இதழாளர்கள்?
  • வெகுமக்கள் ஊடகங்கள் (வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள்) வாயிலான பரப்புரையை எவ்வாறு சிறப்பாகச் செய்யலாம்? விளம்பரம் உதவுமா? கட்டுபடியாகுமா? விளம்பரம் செய்வது விக்கிப்பீடியா கொள்கைக்கு உகந்ததாக இருக்குமா?
  • மாணவர்கள், பள்ளிப் பாடத்திட்டத்துக்குப் பயன்படும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை தந்து உருவாக்கலாமா? வேறு சொற்களில் சொன்னால்: ஆப்பிரிக்காவில் உள்ள இலட்சம் பூச்சி இனங்கள் குறித்தும் கூட நாம் கட்டுரைகள் உருவாக்கலாம். அதுவும் அறிவு தான். ஆனால், எத்தனைத் தமிழருக்கு அதனால் உடனடியாக பயன் விளையும் என்பது கேள்வியே. நாம் கொண்டிருக்கும் குறைவான வளங்களை வைத்து, கூடுதல் தமிழரும் பயன்பெறும் வகையில் எத்தகைய உள்ளடக்கதை முன்னுரிமை கொடுத்து விக்கியில் சேர்ப்பது?
  • ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்தும் பொருட்டு, ஒரு கட்டத்தில் புதிய கட்டுரைகள் உருவாக்கத்தைக் குறைத்துக் கொண்டு துப்புரவுப் பணியை மட்டும் முழு மூச்சில் செயற்படுத்தலாமா? (ஆதரவு = 1.த*உழவன்)
  • ஊடகப் போட்டிக்கு கிடைத்துள்ள ஆதரவைப் பின்பற்றி இன்னொரு போட்டி நடத்தினால், எத்தகைய போட்டி நடத்தலாம்? போட்டி தவிர்த்து புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க வேறு என்னென்ன வழிகளில் செயற்படலாம்?
  • விக்கிப்பீடியா தவிர்த்த பிற விக்கித்திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துள்ளதா? குறிப்பாக, விக்கி மூலம், விக்சனரி? இவற்றை வளர்ப்பது இலகு. இவற்றின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பாளர் கிடைக்கும் வாய்ப்பும் அதிகம். (ஆதரவு = 1.த*உழவன்)
  • புதிய பயனர்கள் பங்களிப்பதில் எதிர்நோக்கும் சிக்கல்கள் என்ன? அவற்றை எப்படித் தீர்ப்பது? (ஆதரவு = 1.த*உழவன்) (எ.கா: இன்னும் விரிவான உதவிக் குறிப்புகள் அளிப்பது)
  • தமிழ் விக்கிப்பீடியாவின் மொழி நடை எப்படி உள்ளது? இதில் நாம் ஏதேனும் மாற்றம் கொண்டு வர வேண்டி உள்ளதா?
  • முதற்பக்க பராமரிப்பு போல் நாம் கவனம் செலுத்த வேண்டிய வேறு விசயங்கள் என்ன? (எ.கா: சிறப்புக் கட்டுரை உருவாக்கம், கூட்டு முயற்சிகள், வலைவாசல் உருவாக்கம் போன்றவை)
  • கூகுள் கட்டுரைகளைச் சீர்திருத்தி முடிப்பதற்கான இலக்கு, வழிமுறை என்ன?
  • தொகுப்புகள் செய்யாத புதுப்பயனருக்கு வரவேற்பு வார்ப்புரு இடுவது பலன் அளிக்கிறதா? இதனைத் தானியக்கமாகச் செய்யலாமா?
  • தமிழ் விக்கியில் தானியக்கமாகச் செய்யக்கூடிய பணிகள் என்ன?
  • அடுத்து, தானியங்கி அடிப்படை கட்டுரைகள் ஏற்றினால் எத்தகைய தலைப்புகளுக்கு முன்னுரிமை தரலாம்?
  • தானியக்கமாகப் பதிவேற்றக் கூடிய கட்டுரைகளை ஒரு பயனர் மனித உழைப்பைச் செலுத்திப் பதிவேற்றிக் கொண்டிருந்தால், அதைத் தானியக்கமாகச் செய்யுமாறு வலியுறுத்தலாமா? அதற்கான உழைப்பை, தொழில்நுட்ப உதவியை அளிக்க முன்வருவோமா?
  • பெண் பங்களிப்பாளர்களை ஈர்ப்பதற்கு என்று நாம் ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டுமா? அல்லது, தனியாக அவர்களை ஈர்ப்பதற்கு என்று ஏதும் செய்யத் தேவை இல்லையா? உலகளாவிய விக்கிமீடியா இலக்குகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
  • வெளி நிறுவனங்களுடன் இணைந்து கூட்டுத் திட்டத்தில் ஈடுபடும் போது அதற்கான வழிமுறைகள் என்ன? தமிழ் விக்கி சமூகத்திடம் எந்த அளவு கட்டுப்பாடு இருக்க வேண்டும். தமிழ் விக்கியின் முழு கட்டுப்பாடு இல்லாத இரண்டு திட்டங்கள் சரியான விளைவைத் தரவில்லை ( எ. கா: கூகுள் திட்டம், கட்டுரைப் போட்டி )
  • ஏற்கனவே பொது வெளியில் உள்ள, ஆனால் விக்கிப்பீடியாவுக்கு உகந்த முறையான உரிமம் இல்லாத உள்ளடக்கங்களை நாம் எப்படிப் பெற்றுக் கொள்வது? இது தொடர்பான நிறுவனங்களை முறையாக தொடர்பு கொள்ள இயலாவிட்டால் என்ன செய்யலாம்?
  • நேரடிப் பங்களிப்புக்கான பரப்புரை தவிர, ஏற்கனவே அச்சில், இணையத்தில் உள்ள அரசு, தனியார் உள்ளடக்கங்களை விக்கிப்பீடியாவுக்கு உகந்த உரிமத்தில் வெளியிடுமாறு பரப்புரை செய்யலாமா? (எ.கா. கேரள விக்கிப்பீடியர்களின் இத்தகைய செயற்பாடு)
  • தமிழ் விக்கித் திட்டங்களுக்கான வள மையம் ஒன்று அமைப்பது பயன் தருமா? எங்கு அமைக்கலாம்? இதில் என்ன இடம்பெற வேண்டும்?
  • விக்கி செய்திகள், பரப்புரை நோக்கங்களுக்காக தமிழ் விக்கி தொடர்பான அடையாள அட்டை ஒன்றின் தேவை சுட்டிக்காட்டப்பட்டது. இதனை எப்படிச் செயற்படுத்தலாம்?
  • நிறுவனமயப்படுத்திய செயற்பாடு சாத்தியமா? தேவையா? நன்மை, தீமை, இடர், அச்சுறுத்தல் என்ன? இந்திய விக்கிமீடியா கிளை உருவான பின்னும் கூட அதனால் திட்டங்களில் நேரடிப் பயன் ஏதும் இல்லை. மொழி சார்ந்த கிளை ஒன்றை உருவாக்கலாமா? அல்லது, விக்கிமீடியா சாராத இலாப நோக்கற்ற நிறுவனம் ஒன்று வெளியில் இருந்து ஆதரவாகச் செயற்படலாமா?

பயனர் 176.45.62.69 பரிந்துரை தொகு

  • தமிழ்நாட்டு பல்கலை கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு விக்கிபிடியாவிற்காக சிறப்பு பயிற்சிக்கு தர ஏற்படுச் செய்ய முயற்சிக்கலாமா?
  • தமிழ் விக்கிபிடியா பங்களிப்பிற்காக கூடுதல் மதிப்பெண்களுக்கான வழிக்காட்டுதலுக்கு தமிழ் நாடு அரசிற்கு பரிந்‌துரைக்கலாமா?
  1. மேலே கூறப்பட்டுள்ள சில பரிந்துரைகளில் எனது ஏற்பை வெளிப்படுத்தியிருக்கிறேன்.
  2. இதுவரை தமிழ்விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஊடகங்களை, விக்கி காமென்சுக்கும் பதிவேற்றிடலாம்.
  3. இதுவரை நடந்த பல்வேறு உரையாடல்களை தரம் பிரித்தமைத்தால், அவை அறியாத பயனர்களுக்கு உதவும். அவரது கேள்விகளும் குறைய வாய்ப்புண்டு.
    ஏற்கனவே, நடந்த உரையாடல்கள் இருப்பது போல(1,2) வகைப்படுத்துதல் அவசியம்.இப்பகுப்பில் ஆலமரத்தடியில் நடந்த உரையாடல்களையும் இணைத்தல் நலம். நடந்த உரையாடல்களில் தேட, பிறமொழிகளில் தேடு வசதி உள்ளது. அதுபோல இங்கும் செய்யப்படுவது அவசியம்.
  4. தமிழ் சூழலுக்கு ஏற்ப ஆலமரத்தடி என்பது போல, மணல் தொட்டி என்பதனை பயிற்சியிடம் என மாற்றினால் புதியவருக்கு புரியும்.
  5. இணையப் பயன்பாடு என்பது தமிழகத்தினை பொறுத்தவரை வளர்முகமாகவே உள்ளது. அலைப்பேசி வழியே இணையத்தை பெறுதல் பற்றி கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.ஏனெனில், அதில்தான் மாதக் கட்டணம் குறைவு. புதியவர்களுக்கு அந்த வேகம் போதும்.
  6. ஆர்வமுள்ள பயனர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு, அவர்களின் நிலையை மேம்படுத்த வேண்டும்.
  7. அறிமுக இணையவகுப்பு அல்லது நிகழ்படத்தொகுப்புகள் உருவாக்க வேண்டும்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்