விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி/பரப்புரை ஆவணங்கள்

பரப்புரைக்கான ஆவணங்கள் தயார்செய்யப்பட்டுள்ளன.

வானொலிக்கு

தொகு

தமிழ் விக்கிப்பீடியா நடத்தும் தமிழ் விக்கி ஊடகப் போட்டி.

தமிழ் - தமிழர் பற்றிய உயர்தர ஊடகக் கோப்புகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவும், புகைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், அசைப்பட ஆர்வலர்கள், நிலப்பட ஆர்வலர்கள் போன்றவர்களையும் விக்கிக்கு பங்களிப்பு செய்யத் தூண்டுவதற்குமாக இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது.

போட்டிக்காக ஆக்கங்கள் சமர்ப்பிக்கும் காலம்: நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி 29, 2012 வரை.

போட்டிக்காக நீங்கள் ஏற்கனவே எடுத்து சேகரித்து வைத்திருக்கும் அல்லது இனிமேல் எடுக்கப்போகும் தரமான படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள் ஆகியவற்றை இப்போட்டியில் பதிவேற்றலாம். பெறுமதிமிக்க பணப் பரிசில்களை வெல்லலாம். நீங்களும் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லுங்கள்.

போட்டி தமிழியல் பற்றியது ஆனால் தமிழர் மற்றும் தமிழரல்லாதோரும் பங்குபெறலாம்.

மேலதிக விபரங்களுக்கு http://ta.wikipedia.org/wiki/contest என்ற இணையப் பக்கத்துக்குச் செல்லுங்கள்.

இணையத்தில் வெளியிட

தொகு

பத்திரிகைகள், இதழ்களுக்கு

தொகு

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்தி வருகிறது.. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.

போட்டி நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் http://ta.wikipedia.org/wiki/contest என்ற இணையமுகவரிக்குச் சென்று முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தகுந்த பதில்களைப் பெறலாம்.

குறிப்பு:பரிசுத்தொகை வெற்றிபெறுபவரின் நாட்டின் நாணய அலகுக்கு மாற்றப்படும்.

கல்வி நிறுவனங்களுக்கு

தொகு



தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. தமிழ்- தமிழர் பற்றிய உயர்தர கோப்புகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவும், புகைப்படக்கலைஞர்கள், ஓவியர்கள், அசைப்பட ஆர்வலர்கள், நிலப்பட ஆர்வலர்கள் போன்றவர்களையும் விக்கிக்கு பங்களிப்பு செய்யத் தூண்டுவதற்குமாக இப்போட்டி நடத்தப்படுகிறது



இதில் பங்கேற்போர்

  • தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும்.
  • ஒருவர் எத்தனை கோப்புகளை வேண்டுமானாலும் பதிவேற்றலாம். கோப்புகளின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு கிடையாது.
  • போட்டி காலம்: நவம்பர் 15, 2011 - பெப்ரவரி 29, 2012



பரிசுகள்:

இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.

மேலதிக விபரங்களுக்கு:

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் http://ta.wikipedia.org/wiki/contest என்ற இணையமுகவரிக்குச் சென்று முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தகுந்த பதில்களைப் பெறலாம்.

குறிப்பு:பரிசுத்தொகை வெற்றிபெறுபவரின் நாட்டின் நாணய அலகுக்கு மாற்றப்படும்.