விக்கிப்பீடியா:தரவுத்தள கட்டுரையாக்கம் - ஐக்கிய அமெரிக்க நகரங்கள் மற்றும் நகரியங்கள்
ஐக்கிய அமெரிக்க நகரங்கள் மற்றும் நகரியங்கள் தொடர்பாக அமெரிக்கன் பக்ட் பைண்டர்-இன் தரவுகளைக் கொண்டு கலைக்களஞ்சிய முறைமைக்கு ஏற்ப தரவுத்தளக் கட்டுரைகளை உருவாக்கும் திட்டமாகும். இக்கட்டுரைகளை Maathavan என்ற எனது கணக்கு மூலம் உருவாக்குகின்றேன்.
அவ்வப்போது தரவுகளைத் தானியக்கமாக இற்றைப்படுத்துவதற்கு ஏதுவாக மாறிச் சரங்களைப் (Variable strings) பயன்படுத்துகின்றேன். இவற்றை எனது TamizhBOT என்ற தானியங்கி மூலம் AWB இனால் இற்றைப்படுத்தலாம். இவற்றை இப்பக்கத்தைத் தொகுக்கும் பயனர்கள் மாற்றாதிருக்குமாறு வேண்டுகின்றேன். அவை சேதப்பட்டால் இற்றைப்படுவது தடைப்படும். பயன்படுத்தப்பட்டுள்ள :
மாறிச் சரங்கள் | அதன் தரவுகளின் பெயர் |
---|---|
pop | மக்கள் தொகை; |
popt | மக்கள் தொகை மற்றும் பரப்பளவு கணக்கெடுப்பு காலம்; |
popd | மக்கள் தொகை அடர்த்தி; |
area | மொத்த பரப்பளவு; |
areal | நிலத்தால் சூழப்பட்ட பரப்பளவு; |
areaw | நீரால் சூழப்பட்ட பரப்பளவு; |