விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024/நிகழ்வில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு
கலந்துகொள்வோரின் பொறுப்புகள்
தொகு- இந்தியாவில் வாழும் பயனர்கள், தமது பயணத்திற்கான ஏற்பாடுகளை தாமே செய்துகொள்ள வேண்டும். இவற்றிற்கானச் செலவுகள் மதிப்பூதியத்தில் உள்ளடங்கும்.
- இலங்கைப் பயனரின் வானூர்திப் பயணத்திற்குரிய ஏற்பாட்டை நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் செய்து தருவர். இலங்கையில் தேவைப்படும் பயண ஏற்பாடுகள், விசா, இந்தியாவில் தேவைப்படும் பயண ஏற்பாடுகள் ஆகியவற்றை பயனர் தானே செய்துகொள்ள வேண்டும். இவற்றிற்கானச் செலவுகள் மதிப்பூதியத்தில் உள்ளடங்கும்.
- பயனர்கள் தமது மடிக்கணினியைக் கொண்டு வர வேண்டும்.
தங்குமிடம், உணவு ஏற்பாடு தொடர்பான தகவல்கள்
தொகு- 27-செப்டம்பர்-2024 அன்று மாலை முதல் 29-செப்டம்பர்-2024 மாலை வரை தங்குவதற்கான அறை வழங்கப்படும். ஒரு அறையில் இருவர் தங்கும் வகையில் இருக்கும். அறைக்கான வாடகையை நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் செலுத்துவர்.
- 27-செப்டம்பர்-2024 அன்றைய இரவு உணவிற்கான ஏற்பாட்டை, கலந்துகொள்பவர் தானே செய்துகொள்ள வேண்டும். இதற்கானச் செலவு மதிப்பூதியத்தில் உள்ளடங்கும்.
- 28-செப்டம்பர்-2024 அன்றைய 3 வேளை உணவு, 2 வேளை நொறுவை / காப்பி / தேநீர் ஆகியன விடுதியில் வழங்கப்படும். இதற்குரியக் கட்டணத்தை நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் செலுத்துவர்.
- 29-செப்டம்பர்-2024 அன்றைய 2 வேளை உணவு, 2 வேளை நொறுவை / காப்பி / தேநீர் ஆகியன விடுதியில் வழங்கப்படும். இதற்குரியக் கட்டணத்தை நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் செலுத்துவர்.
- 29-செப்டம்பர்-2024 அன்றைய இரவு உணவிற்கான ஏற்பாட்டை, கலந்துகொள்பவர் தானே செய்துகொள்ள வேண்டும். இதற்கானச் செலவு மதிப்பூதியத்தில் உள்ளடங்கும்.
மதிப்பூதியம் தொடர்பான தகவல்கள்
தொகுஇந்தியாவிலிருந்து கலந்துகொள்ளும் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான மதிப்பூதியம்
தொகுவரிசை எண் | செலவு விவரம் | தொகை |
---|---|---|
1 | வசிக்கும் ஊரிலிருந்து சேலம் வந்து, திரும்புதலுக்கான போக்குவரத்து* | ₹ 1,500 |
2 | உள்ளூர்ப் போக்குவரத்து (வசிக்கும் ஊரிலும், சேலத்திலும்)** | ₹ 600 |
3 | சேலத்திலிருந்து ஏற்காடு வந்து, திரும்புதலுக்கான போக்குவரத்து*** | ₹ 500 |
4 | 27-செப்டம்பர்-2024 நாளின் இரவு உணவு | ₹ 200 |
5 | 29-செப்டம்பர்-2024 நாளின் இரவு உணவு | ₹ 200 |
- | மொத்தம் | ₹ 3,000 |
* தொடருந்துப் பயணம் (அல்லது) பேருந்துப் பயணம் என்பதாக கருதப்பட்டுள்ளது.
** மூவுருளி உந்துப் பயணம் என்பதாக கருதப்பட்டுள்ளது.
*** பேருந்துப் பயணம், மூவுருளி உந்துப் பயணம் என்பதாக கருதப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து கலந்துகொள்ளும் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான மதிப்பூதியம்
தொகுஇலங்கையில் தேவைப்படும் பயண ஏற்பாடுகள், விசா, இந்தியாவில் தேவைப்படும் பயண ஏற்பாடுகள், 27-செப்டம்பர்-2024 நாளின் 3 வேளைக்கான உணவு, 29-செப்டம்பர்-2024 நாளின் இரவு உணவு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு இந்தியப் பணம் ₹ 10,000 மதிப்பூதியமாக கணக்கிடப்பட்டுள்ளது.