விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/Trengarasu
வாக்கு நிலவரம்: (6/0/0)
காலம்: 1:24, பெப்ரவரி 2, 2007 முதல் 1:15, பெப்ரவரி 9, 2007 வரை (அனைத்துலக நேரம்)
டெரன்ஸ், தொடர்ந்து ஆக்கப்பூர்வமான முறையில் விக்கிபீடியாவிற்கு பங்களித்து வருகிறார். விக்கி நடைமுறைகள், நுட்பங்கள் புரிந்தவராகவும் இருப்பதோடு தள பராமரிப்பிலும் ஆர்வம் காட்டுகிறார். அவருக்கு நிர்வாக அணுக்கம் தருவது அவருடைய தள பராமரிப்புப் பணிகளை எளிமையாக்க உதவும் என்பதால், அவரை நிர்வாகியாக்க பரிந்துரைக்கிறேன்--Ravidreams 14:29, 2 பெப்ரவரி 2007 (UTC)
கோபி, இரவி இருவருக்கும் நன்றி.நான் தொடர்ந்து விக்கியில் செயற்பட வாய்ப்புகள் அதிகமாகி விட்டன. அதனால் நிர்வாகி அணுகத்துக்கான வாகெடுபுக்கு நான் சம்மதிக்கிறேன். நான் இன்று முதல் மார்ச் 10 வரை இலங்கைக்குச் செல்கிறேன் அதனல் ஒருமாதமளவுக்கு விக்கியில் பங்களிப்பு குறைவாக அல்லது பூச்சியமாகவே இருக்கும்.--டெரன்ஸ் \பேச்சு 12:11, 3 பெப்ரவரி 2007 (UTC)
ஆதரவு (Support)
- டெரன்ஸ் தகவற் சட்டங்களை உருவாக்குவதில் ஆர்வத்துடன் செயற்படுவதோடு அநாமதேயப் பயனர் மற்றும் விக்கிபீடியாவில் வேண்டத்தகாத மாற்றங்களை கண்காணித்தும் வருகின்றார். நிர்வாகப் பொறுப்பிருந்தால் இந்த வேலைகளை இலகுவாகச் செய்யலாம். பூரண ஆதரவு. --Umapathy 14:38, 2 பெப்ரவரி 2007 (UTC)
- நுட்பம், கட்டுக்கோப்பான செயல்திறன், ஆர்வம் மிக்க பயனர். த.வி. நன்கு புரிந்தவர். அதன் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் உதவக்கூடியவர். நிர்வாக அணுக்கம் இவருக்கு மிகவும் உதவும். --Natkeeran 15:26, 2 பெப்ரவரி 2007 (UTC)
- கட்டுரை உருவாக்கத்தில் நுட்பத்தை இணைப்பதுடன் தரத்தையும் கரூதிற் கொள்ளும் பயனர். அண்மைய மாற்றங்களைத் தொடர்ந்து அவதானித்து வருபவராதலால் நிர்வாகி அணுக்கம் இவருக்கு மிகப் பயன்படும். --கோபி 16:05, 2 பெப்ரவரி 2007 (UTC)
- அமைதியாய், கட்டுப்பாடுடன், தரமான கட்டுரைகள் பல எழுதி கருத்தை கவர்ந்தவர். நிருவாகப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள இசைந்தது மகிழ்ச்சியூட்டுகிறது. என் ஒப்புதலை அளிக்கிறேன்.--செல்வா 17:17, 2 பெப்ரவரி 2007 (UTC)
எதிர்ப்பு (Oppose)
நடுநிலை (Neutral)
டெரன்ஸ், பயனர்களின் ஒருமித்த ஆதரவுக்கிணங்க உங்களின் நிர்வாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது உங்கள் பங்களிப்புகளை எளிமைப்படுத்துவதற்கும் மேலும் முனைப்புடன் செயல்படுவதற்கும் உதவும் என நம்புகிறோம். வாழ்த்துக்கள்.--Ravidreams 20:26, 9 பெப்ரவரி 2007 (UTC)