விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்/செய்முறை/வரைவு

குறிப்பு: பின்வரும் செய்முறை கட்டாயப்படுத்தி நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதலுக்கான செய்முறை ஆகும்.

முறையீடுகள் யாரும் எப்பொழுதும் பொதுவில் (எ.கா ஆலமரத்தடி) வைக்கலாம் அது பற்றி உரையாடி நன்முறையில் தீர்க்கலாம். வழக்கமான உள்ளடக்கத்தில் கருத்து வேறுபாடுகள், கொள்கை மீறல்கள் போன்றவற்றை அவ்வவ் கொள்கைகளைக் கொண்டே அணுக வேண்டும். நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் என்பது விக்கியில் மிக மிகக் பாரதூரமான செயற்பாடுகளில் ஈடுபடும் நிர்வாகி மீது எடுக்கப்படும் ஒர் உச்ச கட்ட நடவடிக்கையாக அமையும்.

திரும்பப் பெற நியமிக்க முன்னர் முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள்

  1. உங்கள் முறையீடுகள் திரும்பப் பெற நியமிக்கக் கூடிய காரணங்கள் அல்லது அவை போன்ற தீவர தன்மையானவையா என்று உறுதிச் செய்து கொள்ளுங்கள். மேலே சுட்டப்பட்டது போன்று கருத்து வேறுபாடுகள், கொள்கை மீறல்கள் போன்றவற்றை அவ்வவ் கொள்கைகளைக் கொண்டே அணுக வேண்டும்.
  2. முறையீடுகளைத் தெளிவாக, புறவயமான ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தி பிற பயனர்களின் அக்கறைக்கு கொண்டு வாருங்கள். உங்கள் ஒவ்வொரு முறையீடுக்கும் தொடர்புடையை நிர்வாகி என்ன பொருத்தமான மாற்று அல்லது பதில் செயற்பாடுகளில் ஈடுபடலாம் என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்.
  3. உங்கள் முறையீடுகளின் நியாயத் தன்மையை பிற பயனர்களின் கருத்துக்களைக் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள்.
  4. தொடர்புடையை நிர்வாகியை அணுகி அவர் விடைபகிர, தகுந்த மாற்று அல்லது பதில் செயற்பாடுகளில் ஈடுபட தக்க கால இடைவெளி கொடுங்கள்.
  5. அவர் உங்களுக்கு தக்க பதில் தரவில்லை, மாற்று அல்லது பதில் செயற்பாடுகள் செய்யவில்லை என்றால் பிற நிர்வாகிகளை அணுகி தொடர்புடையை நிர்வாகியிடம் பொருத்தமான மாற்று அல்லது பதில் செயற்பாடுகளைச் செய்ய வேண்டக் கோரலாம். இவர்கள் உங்களின் கோரிக்கைகளில் இருக்கும் நியாப்பாட்டைப் பொறுத்து உங்கள் சிக்கல்களை தீர்க்க உதவலாம்.
  6. தொடர்புடைய நிர்வாகியும், நீங்கள் அணுகிய பிற பயனர்கள், அல்லது நிர்வாகிகள் உங்களுக்கு உதவவில்லை என்று நீங்கள் கருத்தினால் திரும்ப்பெற நியமித்தல் செய்முறையை தொடங்கலாம்.

திரும்பப் பெற நியமிக்கக் கூடிய காரணங்கள்

  • நிர்வாக அணுக்கத்தை தொடர்சியாக, ஆவணப்படுத்தப்பட்ட அறிவுறுத்தல்களுக்குப் பின்பும் தவறாகப் பயன்படுத்தல் (எ.கா நீக்கல் கருவி, பயனர்களைத் தடுத்தல்)
  • விக்கி இணக்க முடிவுக்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுதல்.
  • நிர்வாகி என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு தொடர்ந்து விக்கிக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுதல்.

திரும்பப் பெற நியமித்தல்

விக்கிச் சமூகத்திடம் கருத்துக் கோரல்

முடிவெடுத்தல்