விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/குறிஞ்சி
குறிஞ்சி
தொகுபயனர்:குறிஞ்சி, அ.மணிகண்டன் திருநெல்வேலியைச் சார்ந்தவர், இவர்தம் முதல் கட்டுரையை 2015ஆம் ஆண்டில் எழுதினார். தனியார் துறையினில் பணிபுரிந்து வருகிறார். குறைந்தபட்சம் 100 அறிவியல் கட்டுரைகளை தமிழில் துவங்குவதை முதன்மை நோக்கமாக கொண்டு எழுதத்துவங்கினார், ஆனால் அவர்தம் முதலிரண்டு கட்டுரையை அனுபவமிக்க விக்கிப் பயனாளர்கள் விக்கிப்பீடியாவின் கொள்கையோடு கட்டுரை பொருந்தவில்லையென நிராகரித்தனர். அதன்பின்பு தெர்மோவெல் என்ற அறிவியல் சார்ந்த கட்டுரையை மூலம் எழுதப் பயின்றாலும், எண்ணற்ற தொடருந்து சந்திப்பு நிலையங்கள், எளிய அட்டவணைகளைப் பொருளடக்கமாக கொண்ட கட்டுரைகளை எழுதுவதன் மூலம் விக்கியின் கொள்கைகளைப் புரியத்துவங்கினார். பின்பு அவரது அன்றாட பணிச்சூழ்நிலையில் பயன்படுத்தும் எளிய அறிவியல் பொருட்கள், அவரது பயணத்தில் காணும் பொருட்களை ஆங்கில வீக்கிப்பிடியாவிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பு செய்யத்துவங்கினார். இருநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை புதிதாக துவங்கியதுடன், எண்ணற்ற கட்டுரைகளை பிழைதிருத்தம் செய்தும் வருகின்றார். அவரது கூற்றின்படி வீக்கிப்படியாவிற்கு கலைக்களஞ்சிய கட்டுரைகளை எழுதுவதின் மூலம் அவர்தம் பணிச்சூழலில் தரவுசார்ந்து எழுதுவதுற்கு இந்த அனுபவம் பெரிதும் கைக்கொடுக்கின்றது என்கின்றார்.