விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம்
விக்கிப்பீடியா ஒரு அறிவுக்களஞ்சியமாக எல்லா மொழிகளிலும் விளங்குகிறது. இருப்பினும் ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் பிரஞ்சு போன்ற சில மொழிகளில் தான் ஆயிரக்கணக்கான கட்டுரைகளைக் காணமுடிகிறது. மொழிபெயர்ப்பானது, உலகிலுள்ள அனைவரும் தகவல்களைப் பயனுள்ள வகையில் பெறுவதற்கு முக்கியப் பங்குவகிக்கும் என்று கூகுள் நம்புவதால், ஆங்கில மொழிக் கட்டுரைகளைப் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்ய முனைந்துள்ளது.
இம்முயற்சியில் கூகுள் நிறுவனமானது விக்கிப்பீடியாவின் மூலம் குறைந்த தகவல்களுடைய மொழிப் பயனர்களுக்கு உதவுவதற்காக, இந்தியா முழுவதும் தன்னார்வலர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் விக்கிப்பயனர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. கூகுள் மொழிப்பெயர்ப்புத்திட்டமானது இந்தியாவில் 2008 ஆம் ஆண்டில் தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஆங்கிலக் கட்டுரைகள் அரபு, குஜராத்தி, இந்தி, கன்னடம், ஸ்வாஹிலி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கூகுளின் இம்முயற்சி ஒரு நல்ல தொடக்கம் எனினும், விக்கிப்பீடியாவிலிலுள்ள பயனுள்ள தகவல்களை உலகம் முழுவதும் எடுத்துச்செல்வதில் இன்னும் பல படிகள் செல்லவேண்டியிருக்கிறது.--Maheswari 10:35, 28 சனவரி 2011 (UTC)