விக்கிப்பீடியா:பயனர் அழைப்பு கடிதங்கள்

வலைப்பதிவு ஆர்வலருக்கு கடிதம்

தொகு
வணக்கம் பயனர்:

உங்கள் வலைப்பதிவு கண்டேன்.  உங்களுடைய தமிழார்வமும் அறிய முடிந்தது.  நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவிலும்
இணைந்து பங்களித்தால் பயன் தரும்.  தமிழ் விக்கிப்பீடியா பற்றி மேலதிக தகவல் கீழே இணைத்துள்ளேன்.  எந்தவித நுட்ப, 
கலைச்சொல் உதவி தேவைப்பட்டாலும், இயன்றவரை பயனர்கள் அனைவரும் உதவத் தயாராக உள்ளோம். நன்றி.

அன்புடன்,
அனுப்புவர் பெயர்

தமிழ் விக்கிபீடியா (www.ta.wikipedia.org) ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் (Free Encyclopedia). தமிழ் விக்கிபீடியா தமிழில் அனைத்த இயல்களையும் ஒரே மையத்தில் குவித்து வகுத்து தருகின்றது. இது தன்னாவலர்களால் முன்னெடுக்கப்படும் இலாப நோக்கமற்ற, பக்க சார்பற்ற, நடுநிலைமை திட்டம் ஆகும்.


அனைவரும் நேரடியாக அவர்களின் ஈடுபாடு திறன்களுக்கு ஏற்றவாறு, அவர்களுக்கு ஏற்ற நேரத்தில் இணையம் மூலம் தமிழ் விக்கிபீடியாவிற்கு பங்களிக்க முடியும். கட்டுரை உருவாக்கம், மேம்படுத்தல், வகைப்படுத்தல், பக்க வடிவமைப்பு, தள பராமரிப்பு, நுட்ப நெறிப்படுத்தல் என பல வழிகளில்பயனர்கள் பங்களிக்க முடியும்.


நீங்களும் இத்திட்டத்தில் பயனராக இணைவதன் மூலம் தமிழ் விக்கிபீடியாவின் கூட்டு அறிவாக்கம் மூலம் பயன்பெறுவதோடு, தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கும் உதவலாம். இத்திட்டத்தில் நீங்கள் பயனராக பதிகை செய்யாமலே பங்களிக்க முடியும், எனினும் ஒரு பெயர் கொண்டு இணைவது உங்களை அடையாளப்படுத்த பிற பயனர்களுக்கு மிகவும் உதவும். உங்களை தமிழ் விக்கிபீடியாவில் இணைய தமிழ் விக்கிபீடியா சமூகம் அன்புடன் வரவேற்கின்றது.

தமிழ்ச் சங்கத்துக்கு கடிதம்

தொகு

தமிழ் கல்விக்கூடத்துக்கு கடிதம்

தொகு

இணைப்பு இணைக்க வேண்டி கடிதம்

தொகு