விக்கிப்பீடியா:பயனர் கணக்குத் தடை கொள்கை

பின்வரும் காரணங்களுக்காக ஒரு பயனர் கணக்கை நிர்வாகிகள் தடை செய்யலாம். (உண்மையில் ஒரு பயனர் கணக்கை மட்டுமே தடை செய்ய முடியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு பயனரை தடை செய்வது சாத்தியமில்லாத காரியம். அதே பயனர் வெவ்வேறு ip முகவரிகளில் இருந்தோ புதுப் பயனர் கணக்குகளில் இருந்தோ தொடர்ந்து விக்கிபீடியாவை அணுக முடியும்.) இவை பயனர் கணக்கு உருவாக்காது அடையாளம் காட்டாமல் செயல்படுபவர்களுக்கும் பொருந்தும்.

தடை வகைகள்

தொகு

நிரந்தரத் தடை

தொகு

எச்சரிக்கை ஏதும் இன்றி உடனடியாக முடக்கப்பட வேண்டிய கணக்குகள்:

  1. ஆபாசக் கட்டுரைகள், படங்கள் பதிப்போர். (குறிப்பு: பாலியல் வசைச் சொற்கள், விபச்சாரம், பாலின்பப் படம் குறித்த கலைக்களஞ்சிய நடைக் கட்டுரைகள் இதில் அடங்கா.)
  2. குறுகிய கால இடைவெளியில் தொடர்ந்து எரிதப்பதிவுகள் செய்பவர்கள். (எடுத்துக்காட்டு - #$&* போன்ற குறிகள், hi how r u போன்ற உரையாடல்களை தொடர்ந்து கட்டுரைகளாகப் பதிப்பவர்கள்.)
  3. தமிழ் மரபுக்கு ஒவ்வாத பயனர் பெயர்களில் கணக்குகளை உருவாக்குபவர்கள். (எடுத்துக்காட்டுக்குப் பயனர் பெயர்கள் - f***, ஓ**, பு** போன்ற பொது அவையில் உரைக்கத்தகாத சொற்களில் அமைந்த பெயர்கள்).
  4. ஏற்கனவே உள்ள நன்கு அறியப்பட்ட பயனர் கணக்குகளுக்கு ஒத்த பயனர் பெயரில் அமைந்த பயனர் கணக்கு ஒன்று, தெளிவான எரிதம், விசமத்தனம், பொறுப்பற்ற தொகுப்பு ஒன்றை செய்யும் போது. (எடுத்துக்காட்டுக்கு - ravidream, mayuranathan போன்ற பயனர் கணக்குகள்.)

சில மாதத் தடை

தொகு
  1. குழப்பம், பிரச்சினை விளைவிக்கும் பயனர் பெயர்கள். (எடுத்துக்காட்டுக்கு - india, tamilnadu, chiefminister, hinduism, dalit)
  2. அமைப்பின் பெயரிலான பயனர் பெயர்கள். (எடுத்துக்காட்டுக்கு - LTTE, ஐக்கிய நாடுகள், அண்ணா பல்கலைக்கழகம்). விக்கி சமூகத்தில் தனி நபர்களுடன் மட்டுமே உரையாட முடியும். ஒரு பயனர் பெயரில் செயல்படும் பலரிடமோ அமைப்பிடமோ நடுநிலை உரையாடலை கொண்டு வர முடியாது.

மூன்று எச்சரிக்கைகளுக்குப் பிறகு குறுகிய காலத் தடை

தொகு
  1. வெறும் கட்டுரை எண்ணிக்கையை உயர்த்துவதை கருத்தில் கொண்டு, குறுகிய கால இடைவெளிகளில் தொடர்ந்து பயனற்ற கட்டுரைகளை உருவாக்குபவர்கள். (எடுத்துக்காட்டு - யானை ஒரு விலங்கு, பூனை ஒரு விலங்கு.. என்று தொடர்ந்து பல தலைப்புகளில் ஒரே மாதிரியான கட்டுரைகள் உருவாக்குபவர்கள்.)
  2. தொடர்ந்து பிறப் பயனர்களின் கருத்துக்கு பதிலளிக்காமல் தொகுப்புகள் செய்வது.
  3. பிறருக்குப் பதிலளித்தும் விக்கி நடைமுறைகளை புரிந்து கொள்ள முடியாமல் தொடர்ந்து பொறுப்பற்ற முறையிலோ குழந்தைத்தனமான முறையிலோ தொகுப்புகள் செய்வது.

கொள்கை முரண் தடைகள்

தொகு

புதிய பயனர்கள் விக்கிப்பீடியாவின் கொள்கைகளை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அவர்கள் சிறு தவறு இழைக்கும் போது உடனடியாகத் தடுக்க வேண்டாம். அவர்களின் தொகுப்புகளைத் திருத்தி விட்டு, உரிய கொள்கைகளைச் சுட்டிக் காட்டி அவரது பேச்சுப் பக்கத்தில் கருத்து இடுங்கள். புதிய பயனர்கள் பேச்சுப் பக்கத்தை அறியாமல் இருக்கக்கூடும் என்பதால் அவர்களை பயனர் பக்க மின்மடல் வசதி மூலம் தொடர்பு கொள்ள முயலுங்கள். பெரும்பாலான புதிய பயனர்களைத் தங்கள் கட்டுரைகளைமீண்டும் வந்து பார்க்கக்கூடும் என்பதால், அவர்கள் எழுதிய கட்டுரைகளின் துவக்கத்திலேயே நீக்கல் அறிவிப்புடன் சரியான காரணத்தையும் இடுங்கள். இதற்குப் பிறகும் தொடர்ந்து அவர் விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு முரணாகச் செயற்படுவார் எனில் பேச்சுப் பக்கத்தில் மூன்று எச்சரிக்கைகள் இட்ட பின் குறுகிய காலத்துக்குத் தடை செய்யலாம். பல விக்கிப்பீடியாக்களில் முனைப்பாகப் பங்களித்து வரும் பலர் தொடக்கக்காலத்தில் அறியாமையின் காரணமாக தவறான தொகுப்புகளைச் செய்தவர்களே. எனவே, பயனர்களுக்குப் போதிய வாய்ப்பு அளித்த பிறகே தடை செய்வது நலம்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு