விக்கிப்பீடியா:பிற மூலங்களிலிருந்து, பனுவல்களைப் படியெடுத்தல்

விக்கிமீடியத்திட்டங்களில் ஒன்றான விக்கிப்பீடியா என்ற இந்த கட்டுரைப் பகுதி திட்டத்தில், அனைத்தும் கட்டற்ற உரிமத்தில் இருக்க வேண்டும். எனவே, பிற மூலங்களை(sources), பனுவல்களை (text)பயன்படுத்தும் போது, பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற கேட்டுக்கொள்கிறோம். இவ்விதிகளின் தோற்றமானாது தமிழ் விக்கிப் பங்களிப்பாளர்களின் ஏகமனதான இசைவுக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பிற மொழி விக்கியில் இருந்து நகல் எடுத்துப் பின்பற்றப்படும் நடைமுறைகளல்ல . இவை குறித்தவற்றை, இதன் உரையாடற் பக்கத்தில் விரிவாகக் காணலாம்.