விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 29, 2006

வலைப்பதிவு என்பது, அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்தப்படுவதற்குமென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் ஊடாடுவதற்குமான வழிமுறைகள், வலைத்தளங்களை காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். சில நிறுவனங்கள் சாதாரண இணையப்பயனரும் இலகுவாக பயன்படுத்தும் வகையில் இற்றைப்படுத்துவதற்கு தயாரான நிலையில் வலைப்பதிவுகளை வடிவமைத்து வழங்குகின்றன. வலைப்பதிவுகளை தனிப்பட்ட வழங்கிகளிலோ, வலைத்தளங்களில் ஒரு பகுதியாகவோ வடிவமைத்து வைத்துக்கொள்ள முடியும்.


மாட்டு வண்டி என்பது மாடுகளின் இழுவைத் திறன் மூலம் இயங்கும் வண்டி ஆகும். இத்தகு வண்டிகள் பெரும்பாலும் இலங்கை மற்றும் இந்தியப் பகுதிகளில் காணப்படும். இவ்வண்டிகளின் பயன்பாடு பண்டைக் காலம் தொட்டே இருந்து வருகின்றன. பழங்காலங்களில் வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்பட்ட இவ்வண்டிகள், தற்போது தொழிற்சாலைப் பொருட்களை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. விளைபொருட்கள், உர மூட்டைகள், நாற்றுகள், வைக்கோல் ஆகியவற்றை ஏற்றிச்செல்ல வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டிகள் பயன்படுகின்றன.