விக்கிப்பீடியா:விக்கிபாசா சோதனைத் திட்ட ஒருங்கிணைப்பு
விக்கிபாசா கருவி சோதனை ஒருங்கிணைப்புத் திட்டப்பக்கம்.
பின்புலம்
தொகுவிக்கிபாசா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விக்கிப்பீடியா கட்டுரைகளை மொழிபெயர்க்க உதவும் ஒரு கருவியாகும். பல மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதில் தற்போது தமிழ் மொழியை சேர்க்கும் ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன. விக்கிபாசா திட்டத்தின் தலைமை ஆய்வாளர் குமரன் தமிழ் விக்கிப்பீடியர்கள் விக்கிபாசா கருவியினை பயன்படுத்தி தங்கள் கருத்துகளையும் எண்ணங்களையும் தெரியப்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சோதனைத் திட்டத்தினை ஒருங்கிணைக்கவும், விக்கிப்பாசா குறித்தான விக்கி சமூக உரையாடல்கள் அனைத்தையும் ஒரு திறந்த வெளியில் ஆவணப்படுத்தவும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இப்ப்க்கத்தின் மூலம் விக்கி சமூகமும் விக்கிபாசா நிரலாளர்களும் உரையாடலாம்.
வழிகாட்டுக் குறிப்புகள்
தொகு- தமிழுக்கான விக்கிபாசா கருவி இன்னும் உருவாக்க கட்டத்தில் (developmental phase) தான் உள்ளது. நேரடியாக விக்கிப்பீடியாவில் பயன்படுத்தும் அளவுக்கு அதன் தரம் போதாது. எனவே இதனைப் பயன்படுத்தி கட்டுரைகளை நேரடியாக உருவாக்க வேண்டாம். அவரவர் பயனர்வெளியில் பயன்படுத்திப்பார்க்கலாம். கருவியால் உருவாக்கப்படும் தமிழ் உள்ளடக்கத்தை பயனர்கள் நேரடியாக சோதித்து சரிசெய்யாமல் கட்டுரைவெளியில் இணைக்கவேண்டாம்.
- விக்கிபாசாவை பரிசோதித்து பார்த்து, அனுபவமிக்க தமிழ் விக்கிப் பயனர்கள், தங்களுக்குப் புலனாகும் குறைபாடுகள், காண விரும்பும் முன்னேற்றங்கள் ஆகியவற்றை இங்கு பதிவு செய்யலாம்.
- இது ஒரு சோதனைத் திட்டம் மட்டுமே. இதனால் விக்கிபாசாவைத் தமிழ் விக்கிப்பீடியா எந்த அதிகாரபூர்வ விதத்திலும் அங்கீரிக்கவில்லை. (This testing effort should not be taken as any sort of endorsement for Wikibasha from the Tamil wikipedia community).
- இக்கருவியினை ஒரு மொழிபெயர்ப்பு உதவிக் கருவியாக (translation aid) மட்டுமே அணுக வேண்டும். தரம் உயர்ந்தாலும், இயந்திர மொழிபெயர்ப்புக்கு முழுக்க இதனை பயன்படுத்தக்கூடாது.
நிரல்கள் கிடைக்குமிடம்
தொகுதற்போது விக்கிபாசா சோதனைப் பதிப்பானது மீடியாவிக்கி நீட்சியாக அப்பாச்சே 2 உரிமத்தின் கீழும் பகுதியாக GPL v2 உரிமத்தின் கீழும் கிடைக்கிறது.
திறமூல மென்பொருள் உருவாக்குனர்களுக்கான அழைப்பிதழ்
தொகுவிக்கி சமூக ஆர்வலர்களின் பின்னூட்டுகளையும், விக்கிமீடியா வழு அறிக்கைப் பதிகையில் பதிவுசெய்யப்பட்ட வழுக்களையும், அம்சங்களையும் நாங்கள் மதிக்கிறோம். தற்பொழுது, பதிவுசெய்யப்பட்ட வழுக்களையும் அம்சங்களையும் பொருத்துவதன்மூலம் நாங்கள் விக்கிபாசாவை மேண்மையாக்க முயற்சிசெய்துவருகிறோம். உலகம் முழுவதும் உள்ள விக்கீப்பயனர்களுக்கு விக்கிபாசாவை மேலும் பயனுள்ளதாக்க திறமூல மென்பொருள் உருவாக்குனர்களையும் பங்குகொள்ள அழைக்கிறோம். தாங்கள் ஏதாவதொரு வழுவையோ அல்லது அம்சத்தையோ பொருத்தவிரும்பினால், நாங்கள் உதவ காத்திருக்கிறொம்.--WikiBhasha.MSR 11:27, 4 மார்ச் 2011 (UTC)
புத்தகக்குறியாக கிடைக்குமிடம்
தொகுஇது புத்தகக்குறியாக விக்கிபாசா தளத்தில் கிடைக்கிறது.
கையேடு
தொகுவிக்கிபாசாவின் பயனர் கையேடு இங்கு கிடைக்கிறது.
பயனர் கருத்துக்கான அழைப்பு
தொகுஇக்கருவியை விக்கி சமூக ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உருவாக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். மைக்ரோசாஃப்ட் இந்திய ஆய்வகம் (Microsoft Research India), பல்வேறு விக்கி சமூக ஆர்வலர்களிடமிருந்து விக்கிப்பாசா குறித்தான பயன்பாடுகள், குறைபாடுகள், கருத்துகள், எண்ணங்கள் மற்றும் காண விரும்பும் முன்னேற்றங்கள் ஆகியவற்றை புரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது. இதுகுறித்து பல மொழி விக்கிப்பீடியாக்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம்.
நல்ல மொழிபெயர்ப்பி ஏதுமில்லாத சூழ்நிலையில் இக்கருவியை எப்படி மிகவும் பயனுள்ளதாகச் செய்யமுடியும் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறோம். இதுபோன்ற கருவியை விக்கி சமூக ஆர்வலர்கள் பயன்படுத்த அதிலிருக்கவேண்டிய குறைந்தபட்ச அம்சங்கள் எவை என்பதை புரிந்துகொள்வதற்காக, தமிழில் தற்போது விக்கிபாசா ஒரு சோதனை திட்டமாக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ் விக்கிப்பீடியர்கள் விக்கிபாசா கருவியினை பயனர்வெளியில் பயன்படுத்தி தங்கள் கருத்துகளையும் எண்ணங்களையும் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், விக்கிபாசா மீடியாவிக்கி திறந்த வெளியில் இருப்பதால், விக்கிப்பீடியர்களும் இக்கருவியை நேரடியாகவே மேம்படச்செய்ய அழைக்கிறோம். --WikiBhasha.MSR 04:22, 1 மார்ச் 2011 (UTC)
விக்கிபாசாவை விக்கி சமூக ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்த நாங்கள் online பட்டறைகளும் ஏற்படுத்தியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இங்கே சென்று பார்க்கவும்.--WikiBhasha.MSR 11:27, 2 மார்ச் 2011 (UTC)
வழு அறிக்கைகள்
தொகுஇக்கருவியில் உள்ள வழுக்களையும் வேறு மேம்பாட்டுக்கான கோரிக்கைகளையும் விக்கிமீடியா வழு அறிக்கைப் பதிகையில் பதிந்து கவனித்து வரலாம்.
பயனர் கருத்துக்கள்
தொகுநற்கீரன்
தொகு- கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
- நிறுவுதலுக்கான வழிகாட்டிகள் நன்று, நிறுவுதல் இலகு.
- இரண்டு பக்கத்தையும் நேரடியாக பார்ப்பது இலகுவாக உள்ளது.
- Collect, Compose, Submit படிகள் எளிமையாக உள்ளன.
- தொடர்ச்சியாகத் தோன்றும் Original என்ற பப் அப் இடையூறு தருகிறது. அதை தடுப்பதற்கான தெரிவு நல்லதாக அமைந்தது.
- மொழிபெயர்ப்பின் தரம் பற்றி தற்போது மதிப்பீடு செய்யவில்லை.
- ஒரு பகுதியை நகல் (copy) எடுபபது சிக்கலாக உள்ளது. ஒரு பகுதியை முழுமையாக நகல் எடுக்க முடியவில்லை. நான் IE 7 பயன்படுத்துகிறேன். Ctrl + C வேலை செய்வதாகத் தெரியவில்லை.
- மேலோட்டமாகப் பார்க்கையில் கட்டுரை ஆக்கத்தின் போது மிகவும் பயன்படுத்தக்க கருவியாகத் தெரிகிறது.
- நகல் எடுப்பது ஒட்டுவது இன்னும் intutive ஆக இல்லை. நான் நினைத்தன், அது மஞ்சளாக இருந்தால், அதை நகல் எடுக்கலாம் என்று, ஆனால் இரண்டு முறை செடுக்கிய பின்னரே நகல் எடுக்க முடியும். right click செய்து நகல் எடுத்து ஒட்டுவதை ஏதுவாக்கினால் நன்று. நகல் ஒட்டில் ஏதோ வழு இருப்பது போலவே தெரிகிறது.
--Natkeeran 00:55, 3 மார்ச் 2011 (UTC)
- தங்களின் பின்னூட்டு தகவல்களுக்கு மிக்க நன்றி. தங்களின் IE-7யை IE-8ஆக upgrade செய்தால், நகலெடுப்பது (Ctrl+c) சாத்தியமாகும். விக்கிபாசாவை மேலும் பயனுள்ளதாக்க தங்களிடம் ஏதாவது குறிப்பிட்ட கருத்துக்களிருந்தால் தெரிவிக்கவும். தங்களுக்கு தேவைப்பட்டால் நாளை நடக்கவிருக்கும் online பட்டறையில் தங்களை சந்திக்க காத்திருக்கிறோம். --WikiBhasha.MSR 10:49, 3 மார்ச் 2011 (UTC)
இரவி
தொகுதிறமூலமாக விட்டிருப்பது வரவேற்கத்தக்க முயற்சி. இத்திட்டத்தில் உழைத்த அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.
- தங்களின் பாராட்டுகளுக்கும், நன்றிகளுக்கும் முக்கியமாக பின்னூட்ட கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. எங்களின் பதில் கீழே வரிகளின் ஊடாக (in-line) உள்ளது.--WikiBhasha.MSR 08:08, 4 மார்ச் 2011 (UTC)
- disable translation popup இயல்பிருப்பாக இருக்க வேண்டும். திரும்பத் திரும்ப original என்று தலைப்பிட்டு வருவது இடையூறாக உள்ளது.
- இதற்காக விக்கிமீடியா வழு அறிக்கைப் பதிகையில் ஏற்கனவே பதிவாகியுள்ள ஒரு வழுவை திருப்பவும் திறந்துள்ளேன். --WikiBhasha.MSR 08:08, 4 மார்ச் 2011 (UTC)
- எழுதும் பெட்டியை இன்னும் பெரிதாக்கலாம். உரைப்பெட்டிகளுக்கு மேலே உள்ள பகுதிகளை collapse செய்வது போல் இருக்கலாம்.
- நல்ல கருத்து. இதற்காக விக்கிமீடியா வழு அறிக்கைப் பதிகையில் புதிதாக ஒரு வழுவை திறந்துள்ளேன்.--WikiBhasha.MSR 08:08, 4 மார்ச் 2011 (UTC)
- விக்கிப்பீடியாவின் உட்பொதிந்துள்ள தமிழ் எழுது கருவி, பயர்பாக்சு தமிழ்விசை நீட்சி போன்றவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. இது மீடியாவிக்கி நீட்சி என்பதால் வழமையான விக்கிப்பீடியா உரைப்பெட்டி போலவே செயல்பட்டால் நன்று. எல்லாருடைய கணினியிலும் தமிழ் எழுதுவதற்கான எ-கலப்பை, NHM எழுதி போன்றவறை இருக்கும் என எதிர்பார்க்க இயலாது.
- இதனை ஏற்கனவே திரு. குறும்பன்அவர்கள் தெரிவித்திருக்கிறார். இதனை ஒரு வழுவாக விக்கிமீடியா வழு அறிக்கைப் பதிகையில் பதிவு செய்து கவனித்து வருகிறோம்.--WikiBhasha.MSR 08:08, 4 மார்ச் 2011 (UTC)
- கருவி இன்னும் வேகமாக செயற்பட்டால் நன்று. scratch pad திறந்தால் நகர்த்தவோ மூடவோ முடியாமல் தொல்லை தந்தது (உபுண்டு, பயர்பாக்சு). விண்டோசில் வேகம் பரவாயில்லாமல் இருந்தது.
- விக்கிபாசாவை வேகப்படுத்த முயற்சி செய்துவருகிறோம்.--WikiBhasha.MSR 08:08, 4 மார்ச் 2011 (UTC)
- ஆங்கில விக்கியில் இருந்து வரும் போது, ஒரு முறை தமிழ் என்று தேர்ந்தெடுத்த பிறகு, அதுவே நினைவு வைத்துக் கொண்டால் பரவாயில்லை (cookie மூலம்). ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டாமே?
- நல்ல கருத்து. ஆனால் cookieன் பயன்பாடு நம்பகத்தன்மையற்றது. ஏனெனில் cookieயை பல பயனர்கள் முடக்கிவிடுகின்றனர். மேலும் இவை ஓரு sessionக்கு மட்டுமே பயன்படும். இருப்பினும் இந்த பயன்பாட்டை கொண்டுவர முயற்சிசெய்துவருகிறோம்.--WikiBhasha.MSR 08:08, 4 மார்ச் 2011 (UTC)
- சந்தையில் இலவசமாக கிடைக்கும் மற்ற மொழிபெயர்ப்பிகளை விட கூடுதல் உரைப்பகுதியை மொழிபெயர்ப்பது போல் தெரிகிறது. எனினும், உரையின் தரம் புரிந்து கொள்ளும் படி இல்லை. --இரவி 14:23, 3 மார்ச் 2011 (UTC)
- மொழிபெயர்ப்பியின் தரத்திற்கான தங்களின் கருத்தை நாங்கள் முழுதும் புரிந்துகொள்கிறோம். மைக்ரோசாஃப்ட் ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பியின் தரம் உயர்த்தவேண்டிய காரணத்திலிருப்பதால், இதனை அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடவில்லை. எனினும் விக்கிபாசாவிற்காக தமிழ் விக்கி சமூக ஆர்வலர்களிடம் தொடர்புகொள்ள நினைத்ததால் ஆங்கிலம்-தமிழ் மொழிப்பெயர்ப்பியை விக்கிபாசாவில் சேர்த்தோம். கூடுதல் தரவுகள் மொழிப்பெயர்ப்பியின் தரத்தினை உயர்த்தலாம்.--WikiBhasha.MSR 08:08, 4 மார்ச் 2011 (UTC)