விக்கிப்பீடியா:விக்கிபீடியா தூதரகம்

விக்கிப்பீடியாத் திட்டம், ஐம்பதுக்கு மேற்பட்ட மொழிகளிலுள்ள விக்கிகளை இயங்கு நிலையிலும், இன்னும் நூறு மொழி விக்கிகளை ஆயத்த நிலையிலும் கொண்டுள்ள ஒரு பன்மொழித் திட்டமாகும்.

முழு விக்கிப்பீடியாவும் சம்பந்தப்பட்ட கொள்கை, எங்கள் எல்லோரையும் பாதிக்ககூடிய மென்பொருள் தொடர்பான தீர்மானங்கள் மற்றும் மொழிகளிடை இணைப்பு போன்ற மொழிகளுக்கிடையேயான விடயங்களில் உதவும் வகையில் விக்கிப்பீடியா தூதரகம் மீட்டாவில் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பக்கத்துக்குச் செல்வதன் மூலம் ஒரு மொழிக்கான புதிய தூதரகத்தைத் தொடங்குவது பற்றிய விபரங்களை அறிவதுடன் உங்களை ஒரு தூதுவராகப் பதிந்து கொள்ளவும் முடியும்.

உங்கள் சொந்த மொழி மூலமும் உதவி கோரக்கூடிய, ஆங்கில தூதரகம் பற்றிய விபரங்களை அறிய wikipedia:Local embassy பக்கத்தைப் பார்க்கவும்.

புதிய மொழியொன்றில் விக்கிப்பீடியாவைத் தொடங்குவது எப்படி என்பது பற்றிய விபரங்களை அறிய புதிய விக்கிப்பீடியா தொடங்குவது எப்படி? பக்கத்துக்குச் செல்லுங்கள்.

விக்கிப்பீடியா அஞ்சற் பட்டியல் தொகு

விக்கிப்பீடியா-L விக்கிப்பீடியா அஞ்சற் பட்டியலில் எல்லா மொழிகளையும், தேசங்களையும் சேர்ந்த விக்கிபீடியர்கள் சேர்ந்து கொள்ள முடியும். முதன்மை மொழி ஆங்கிலமாகும், எனினும் எல்லா மொழிகளும் வரவேற்கப்படுகின்றன -- தேவையேற்படின் யாராவது ஒருவர் மொழிபெயர்க்கலாம். (இரு மொழித் தகவல்கள் "மிகவும்" வரவேற்கப்படுகின்றன!)

தூதர்கள் தொகு

ஒரு விக்கிப்பீடியா தூதர் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் சமுதாயத்தின் நலன் சம்பந்தமான விடயங்களை அறிவதற்காகத் தூதரகத்திலும், விக்கிப்பீடியா-L, விக்கிடெக்-L என்பவற்றில் ஒரு கண் வைத்துக்கொள்வது அவசியம். அத்துடன் சொந்தச் சமுதாய மட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட விபரங்களில் பன்மொழிச் சமுதாயத்தைப் பாதிக்கக்கூடிய அல்லது அவர்களுக்கு நன்மை தரக்கூடிய விடயங்களை அவர்களுடைய கவனத்துக்குக் கொண்டுவருதலும் வேண்டும்.

எல்லாத் தூதரகங்களினதும், தூதர்களினதும் பட்டியலை m:Wikipedia Embassy பக்கத்தில் காணலாம்.

நடப்பு விவகாரங்கள் தொகு

நடப்பு அனைத்துலக விவகாரங்களை மீட்டா வில் கலந்துரையாட வேண்டும். பழைய விடயங்கள் archived hereல் உள்ளன. ta:Wikipedia:தூதரகம்