விக்கிப்பீடியா:மீடியாவிக்கி தமிழாக்கத் திட்டம்

மீடியாவிக்கி தமிழாக்கத்திட்டத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இத்திட்டம் அதன் நிறைவை எட்டும் போது, விக்கிப்பீடியா உட்பட அதன் துணைத் திட்டங்கள் அனைத்திலும் காணப்படும் பயனர் இடைமுகங்களையும் முழுவதுமாக தமிழில் தரும். இத்திட்டம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளது:

  1. தமிழாக்கத்தை விரைவாக்குவது
  2. பிழைகளைக் கண்டுபிடித்து திருத்துவது
    1. இலக்கணப் பிழைகள்
    2. எழுத்துப் பிழைகள்
    3. கருத்துப் பிழைகள்

தமிழாக்கத்தில் காணப்படும் பிழைகளைச் சுட்டிக் காட்டியும் மொழிபெயர்ப்பு உதவிகளுக்கு பதிலளித்தும் இத்திட்டத்தில் நீங்களும் பங்குபற்றலாம்.

தமிழாக்க நடவடிக்கைகள் பீட்டா விக்கி தளத்தில் நடைப்பெற்று வருகிறது. அங்கே நேரடியாகச் சென்று நீங்களும் மொழிபெயர்ப்புகளைச் செய்யமுடியும். பீட்டா விக்கிதளத்தில் எப்படி பங்களிப்பைத் தொடங்குவது என்பதை அறிய எப்படித் தொடங்குவது என்றப் பக்கத்தைப் பார்க்கவும். உதவிகள் வேண்டுமாயின் http://translatewiki.net/wiki/Portal:Ta தமிழ் வலைவாசலில் கேட்கலாம்].

மொழிநடை

தொகு

ஏவல் நடை

தொகு

மொழிபெயர்ப்பில் ஏவல் செய்வது போன்ற தோணியை தவிர்க்க வேண்டுமென நினைக்கிறேன். முடிந்த வரையில் அவற்றை வியங்கோள் வினைமுற்றாக வைத்திருக்கலாம்.

உதாரணமாக:

தேடு --> தேடுக
செல் --> செல்க
தடு --> தடுக்கவும்

போன்றவற்றை பரிசீலிக்கவும் Vinodh.vinodh 15:08, 1 March 2008 (UTC)

வழிமொழிகிறேன். --Ravi 18:34, 1 March 2008 (UTC)

தமிழாக்க உதவி

தொகு
  • domain - ஆட்களம் (ஆள்களம்?)
  • changed event visibility
  • Oversight log