விக்கிப்பீடியா:Template documentation

1942ல் ரூ.750க்கு உருவாக்கப்பட்ட மரத்தேருக்கு: 2018 ல் ரூ.2 லட்சத்தில் இரும்பு சக்கரம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 1942ல் ரூ.750 செலவில் செய்யப்பட்ட தத்ரூபமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய ஸ்ரீ சென்றாயப்பெருமாள் மரத்தேருக்கு, 76 ஆண்டுக்கு பிறகு ரூ. 2 லட்சம் செலவில் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான சீதேவி, பூதேவி சதேம ஸ்ரீசென்றாயப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், அங்கமுத்து படையாச்சி–வள்ளியம்மாள் தம்பதியரால் நிர்மானிக்கப்பட்ட அக்கோவில், அவர்களது சந்ததியரால் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

 	கடந்த 3 ஆண்டுக்கு முன், குறிஞ்சி கோபுரம், ராஜகோபுரம், மஹா மண்டபம் சகிதமாக  பல லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷக விழா நடைபெற்றது. அக்கோவிலுக்கு, 1942ம் ஆண்டு ஆவணி மாதம் 12ந்தேதி ,  ரூ.750 செலவில் தத்ரூபமான சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரமாண்டமான மரத்தேர் உருவாக்கப்பட்டது.

45 ஆண்டுக்கு முன் தேரோட்டம் நடைபெற்ற போது, எதிர்பாராதவிதமாக சிறிய விபத்து ஏற்பட்டதால், அதன்பிறகு தேரோட்டம் நிறுத்தப்பட்டது. அதனால், அந்த மரத்தேர் பராமரிப்பின்றி முடங்கிக் கிடந்தது. பழமையான அத்தேரை புதுப்பித்து தேரோட்டம் நடத்திட கோவில் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். அதனையடுத்து, 76 ஆண்டுகளுக்கு முன் ரூ.750 செலவில் உருவாக்கப்பட்ட மரத்தேருக்கு, ரூ. 2 லட்சம் செலவில் திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து நான்கு சக்கரங்கள் மற்றும் இரு அச்சுகளை வாங்கி வந்து பொருத்தி புதுபித்துள்ளனர். புதுப்பிக்கப்பட்ட மரத்தேருக்க ஆயக்கால்கள் வடிவமைத்து வரும் தமிழ் மாதமான சித்திரை அல்லது வைகாசியில் தேரோட்டம் நடத்திய கோவில் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். 45 ஆண்டுகளுக்கு பிறகு பழமையான ஸ்ரீ சென்றாயப்பெருமாள் கோவில் தேரோட்டம் நடத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுகுறித்து நிகழாண்டு கோவில் நிர்வாகிகள் கூறியதாவது: வாழப்பாடியில் மிகவும் பிரசித்திபெற்ற அக்ரஹாரம் ஸ்ரீ சென்றாயப்பெருமாள் கோவில் மரத்தேரை, திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து இரும்பு சக்கரங்களை தயாரித்து பொருத்தி 76 ஆண்டுக்கு பிறகு தற்போது புதுப்பித்துள்ளோம். பக்தர்களின் வேண்டுகோளின் பேரில், 45 ஆண்டுக்கு பிறகு வரும் தமிழ் மாதமான சித்திரை, வைகாசியில் தேரோட்டம் நடத்திட திட்டமிட்டுள்ளோம் என்றனர்.