விக்கிப்பீடியா பேச்சு:துறைசார் பயிற்சிகள்

நல்ல முயற்சி, நற்கீரன். பரப்புரைக்கும் இருக்கிற விக்கிப்பீடியர்களின் திறன்களைக் கூட்டவும் பெரிதும் உதவும். முதல் கட்டமாக, வலையுரைகளாக (webinars) பல பயிற்சிகளை ஏற்பாடு செய்வது பயன் மிக்கதாக இருக்கும். இது தொடர்பாக தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையுடன் பேசியிருக்கிறேன். அவர்களும் மீடியாவிக்கி அடிப்படைகள், GIMP / Inkscape முதலிய பல்வேறு தலைப்புகளில் வலையுரைகளை ஏற்பாடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். முதலில் சோதனைக்காக சில வலையுரைகளை நாமே செய்து பார்த்து விட்டு, பிறகு வெளிநிறுவனங்களின் உதவியைக் கோரலாம்.

பயிற்சிகளுடன் சில உரையாடல்கள், விருந்தினர் விரிவுரைகள் போன்றவையும் கூகுள் hangout மூலமாக ஒளிபரப்பலாம். பரப்புரைக்கும் வலைப்பின்னலுக்கும் உதவும். ஆனால், இது மிகவும் கவனமாகச் செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்கும் (யாரை அழைப்பது, எதைப் பற்றிப் பேசுவது, எப்படிப் பேசுவது, உரையாடலுக்கும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் உள்ள முறையான பொறுப்புடைமை என்ன என்று...) தொடக்க முயற்சியாக ஆங்கில விக்கிப்பீடியாவில் தமிழில் பங்களிப்பவர்கள், இந்திய மொழிகள் தொடர்பாக விக்கி நுட்பத்தில் பங்களிப்பவர்கள், grants / chapter குழுக்களில் இருந்து சிலருடன் உரையாடலாம். இது தொடர்புகளைக் கூட்டுவதுடன், பல்வேறு நிலைகளில் தமிழ் விக்கியில் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்க்கும்.--இரவி (பேச்சு) 07:09, 15 அக்டோபர் 2013 (UTC)Reply

Return to the project page "துறைசார் பயிற்சிகள்".