விக்கிப்பீடியா பேச்சு:நடுநிலை நோக்கு
குறிப்புகள்
தொகு13.5. Equanimity (நடுநிலைமை)
யாதும் ஊரே யாவரும் கேளிர்.... பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே - கணியன் பூங்குன்றன் கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே..... எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே - இராமலிங்கர்
http://www.tamilnation.org/literature/krishnamurti/13conclusion.htm
நடுநிலைமை என்று ஒன்று உள்ளதா? எதாவது ஒரு பக்கம் சாய்ந்துதானே ஆக வேண்டும்?-மோகன் "உன்மையின் பக்கம் சாய்வதில் நடுநிலைமை கலைவதில்லை." சுஸாதா பதில்கள் www.ambalam.com/sujatha/2002/april/sujatha14_01.html
- 'The opposite of a profound truth is often another profound truth.'
- 'உண்மைக்கு முன் நடுநிலைமை என்பது இல்லை.'
- "நீதிக்கும் அநீதிக்கும் இடையே "நடு" என்ற ஒரு வார்த்தை உண்டா? சுத்தத்துக்கும் அசுத்தத்துக்கும் இடையே "நடு" என்ற ஒருவார்த்தை உண்டோ? அளவான சுத்தம் - அளவான அசுத்தம் என்று உள்ளதோ?" - புதுவை இரத்தினதுரை
- நம்புங்கள் ஆனல் உறுதிசெய்யுங்கள்.
- paradox,
சுட்டிகள்
தொகு- நடுநிலைமை - சாத்தியமா?
- தராசு : தேவை நடுநிலைமை
- நாங்கள் நடுநிலைவாதிகள் அல்ல
- ஊடகங்களின் அரசியல் நடுநிலைமை - ஒரு கேள்விக்குறி -?
- A Closer Look at the Neutral Point of View (NPOV)
- Limitations of Wiki News' Neutral Point of View Policy
- Contradiction
- An Outrageous View about Contradiction?
--Natkeeran 06:45, 6 டிசம்பர் 2006 (UTC)
நடுநிலை நோக்கு எதிர் அறிவியல் நோக்கு
தொகுஅனேக த.வி. விடயங்கள் அறிவியல் பாங்கில் எழுதப்படவேண்டும் என்பதே பொதுப் புரிந்துணர்வு. எனவே, இந்த அறிவியல் நோக்குக்கும் நடுநிலை நோக்குக்கும் முரண்பாடு உண்டா?
நடுநிலை என்பது அனைத்து பார்வைகளுக்கும் சம உரிமை, சம முக்கியத்துவம் தருவதென்பதா?
தொகுஇல்லை. சில பார்வைகள் முக்கியத்துவம் கூடியவை. சில குறிப்பிடத்தக்கவை. சில வெறும் பரப்புரை அல்லது பொய்கள் (mis information or false information).
யார், எப்படி உண்மையை, நடுநிலைமையை நிர்ணயம் செய்வது?
தொகுஆதாரங்கள். மனிதர்கள் (விக்கிபீடியா சமூகம்). விக்கிபீடியா சமூகம் என்னும் பொழுது, பொது சமூகத்தின் பிரதிநிதியாகவே இங்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும். எப்படி ஒரு மருத்துவர், ஒரு விஞ்ஞானி, ஒரு கணிதவியலாளர், ஒரு பொறியிலாளர் சமூகத்தின் அங்கமாக உண்மையை நிர்ணயம் செய்கின்றார்களோ, ... அப்படியே.
அவர்கள் சிறப்பாக படித்து, அனுபவம் பெற்று நிர்ணயம் செய்கின்றார்கள். ஆனால், த.வி. யாரும் தொகுக்கலாம், எனவே படிப்பு அனுபவம் இங்கு உறுதி செய்யப்படவில்லையே என்ற கேள்வி எழுகின்றது.
அதனால்தான் த.வி. இயன்றவரை தரம் என்று அறிவித்து, உறுதிசெய்யும் பொறுப்பை பயனரிடம் அல்லது வாசகனிடம் விடுகின்றது. இங்கு உறுதிபடுத்தப்பட்ட தரம் இல்லை.
பார்வையை வலியுறுத்தாமால் எழுதுதல்
தொகு--Natkeeran 02:54, 26 டிசம்பர் 2006 (UTC)
மத சாரபுடை கட்டுரைகளின் நடுநிலை?
தொகுநான் மூன்று மத கட்டுரைகளை விக்கியில் படித்தேன். அவற்றில் பெரும்பாலும் நடுநிலையற்ற சொல்லாட்சியே காணப்படுகிறது. உதாரணமாக :- குரான் புனிதமானது. இந்த சொற்றொடரில் நடுநிலைதன்மையினை நான் கேள்விக்கு உட்படுத்துகிறேன். குரான் புனிதமானது என்று இசுலாமியர்களால் நம்பபடுகிறது என்பதுதானே நடுநிலை. மற்ற மதத்தினர் குரானை புனிதமாக கருதுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், எந்த இறைமறுப்பாளனும் குரானை மட்டுமல்ல எந்த மத நூல்களையும் புனிதமாக கருதுவதில்லை. இறைமறுப்பாளர்கள் உலக அளவில் சிறுபான்மையினர் என்பதால் இவ்வாறான கருத்துகள் நடுநிலையற்ற தன்மையோடு எழுதப்படுவதை ஏற்க கூடாது. இது பெரும் ஆபத்தாகும்.