விக்கிப்பீடியா பேச்சு:நடைக் கையேடு/எழுத்துப்பெயர்ப்பு/ஆங்கில மாதப் பெயர்கள்

பல்வேறு கட்டுரைகளில் ஆங்கில மாதப் பெயர்களுக்கு பல்வேறு எழுத்துக்கூட்டல்கள் காணப்படுகின்றன. இது குறித்து கோபியும் தெரிவித்திருந்தார். தொடர்புடைய உரையாடல்களை இங்கு செய்யலாம். இறுதி செய்யப்படும் எழுத்துக்கூட்டல்களில் முதன்மைக் கட்டுரைகளை அமைக்கலாம். மாற்றுப் பெயர்களில் வழிமாற்றுப் பக்கங்களை உருவாக்கலாம்.--ரவி 11:45, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

மாதப் பெயர்களைப் பலவிதமாக எழுதிவருபவர்களில் நானும் ஒருவன் என்றே நினைக்கிறேன். ஓர் உண்மை சொல்கிறேன் ரவி; சிரிக்காதீர்கள். நேற்றிரவு படுக்கைக்கு செல்லும்போது பிப்ரவரி, செப்டம்பர், அக்டோபர் என பாடமாக்கிக் கொண்டு படுத்தேன். :-) ஆகஸ்டு என்பதை முன்னதாகவே பாடமாக்கி விட்டேன் :-)))

ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, நவம்பர், டிசம்பர் ஆகியன தொடர்பில் சிக்கலில்லை என்றே நினைக்கிறேன். ஈழத்தில் யூன், யூலை என்றெழுதும் வழக்கமுண்டு; ஆனால் எல்லோரும் அவ்வாறு பயன்படுத்துவதில்லை. August ஐ நாம் ஓகஸ்ற், ஆகஸ்ற் என எழுதுவதுண்டு. தமிழகத்தவர் ஏற்க மாட்டிர்கள். ஆனால் ஆகஸ்டு என்பது பொருத்தமில்லை. ஆகஸ்ட் என்றால் பரவாயில்லை.

பிப்ரவரி, செப்டம்பர், அக்டோபர் என்பன தொடர்பில் நான் எதுவும் சொல்வதாயில்லை. நான் பாடமாக்கி விட்டேன்;-) ஏனைய விக்கிபீடியர்களின் கருத்தை ஏற்றுக் கொள்வேன். கோபி 14:15, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

கட்டுரைப் பக்கத்தில் உள்ள பரிந்துரைகள் நான் தொகுத்தவையே..எனவே என் விருப்பத்தில் மாற்றமில்லை. சனவரி, சூன், சூலை என்றழைக்கப் பரிந்துரைத்தாலும் உடன்பாடே. ஆகஸ்ட், அக்டோபர் ஆகியவற்றை விட்டுக்கொடுப்பதாய் இல்லை :) கோபி, உண்மையில் உங்கள் மறுமொழியைக் கண்டதும், நீங்கள் வேண்டாம் என சொல்லியிருந்தாலும் சிரிப்பு வந்து விட்டது :) நல்ல புரிதலோடு நீங்கள் செயல்படுவதில் எனக்கு மகிழ்ச்சி--ரவி 22:28, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

ரவி, பிப்ரவரி என்பதை விட பெப்ரவரி எனப் பரவலாகப் பயன்படுவதாகத் தெரிகிறது. ஈழத்தை மட்டும் சொல்லவில்லை. விண்டோசிலும் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய வல்லுனர்கள் பரிந்துரைத்திருக்கவே வாய்ப்புக்கள் அதிகம். ஆகஸ்டு என்றே நாட்களின் பெயர்கள் இடப்படுகின்றன. ஆகஸ்ட் என்பது சரியாகப் படுகிறது எனக்கு. பிப்ரவரி, பெப்ரவரி தொடர்பிலும் ஒரு முடிவுக்கு வருவது நல்லது. மார்ச்சு என்பதை விட மார்ச் சரியாகத் தெரிகிறது. ட், ச் போன்ற எழுத்துக்களில் சொல் முடியலாகாது என்பதால் ஆகஸ்டு, மார்ச்சு எனப் பரிந்துரைத்தீர்களா? ஆயினும் எனக்கு ஆகஸ்ட், மார்ச் அதிகப் பொருத்தமாகப் படுகிறது. ஏனைய பயனர்களதும் கருத்தறிந்து மாற்றங்கள் செய்தால் நல்லது. நன்றி. --கோபி 18:17, 20 ஆகஸ்ட் 2006 (UTC)
Return to the project page "நடைக் கையேடு/எழுத்துப்பெயர்ப்பு/ஆங்கில மாதப் பெயர்கள்".