விக்கிப்பீடியா பேச்சு:நபர்களைப் பற்றிய நிழற்படப்போட்டி

தமிழ் விக்கியில், பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், சினிமா துறையினர், கவிஞர்கள் போன்றோரின் கட்டுரைகளில் பெரும்பாலும், அவர்களின் புகைப்படம் இருப்பதில்லை.

அவற்றை சேர்க்க நபர்களைப் பற்றிய நிழற்படப்போட்டி நடத்தலாமா?

உயர் நுணுக்கப் படங்கள் வழங்கக் கோரலாம். கண்டிப்பாக பொதுவகத்தில் இதற்கான வழிகாட்டல்கள் இருக்க வேண்டும்.

தற்போது உள்ள தொடர் கட்டுரைப் போட்டி பாணியிலேயே இதற்கான போட்டியையும் நடத்த வேண்டும்.

  • ஆங்கில விக்கிப்பீடியா / தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ள தமிழ் பிரபலங்களுக்கான ஒளிப்படங்களைத் தர வேண்டும்.
  • கூடுதல் எண்ணிக்கையில் வெவ்வேறு பிரபலங்களுக்கான படங்களைத் தருபவர் வெற்றியாளர்.

தொழில்முறை ஒளிப்படக்காரர்கள், இதழ்கள், நெடுங்கால ஒளிப்படக்காரர்கள் தங்கள் தொகுப்புகளைத் தரத் தூண்டும் வண்ணம் சற்று பெரிய பரிசாக இருப்பது நல்லது.

இதை வழிநடத்த பொறுப்பாளர்கள் தேவை. −முன்நிற்கும் கருத்து Tshrinivasan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.

இது பற்றி எனக்குள்ள கேள்விகள்:
  • போட்டியின் இலக்கு என்ன?
  • தமிழ் - தமிழர் பற்றிய ஊடகப் போட்டி 2012 இல் நடத்தப்பட்ட அளவிற்கு இது வீச்சு உள்ளதாக இருக்குமா? இலக்கு நாடுகள் எவை? எத்தனை பேர் இதற்குப் பங்களிப்பார்கள்?
  • தனி நபர் ஒளிப்படங்கள் தேவை முக்கியத்துவம் உள்ளதா? த.வி.யில் தனி நபர் ஒளிப்படங்களை பதிவேற்றிப் பயன்படுத்தும் முறையும் உள்ளதே.
  • 10 ஆண்டு விழா நிகழ்வில் கொண்டாடியுள்ள த.வி. இன்னுமொரு சுமையைச் சுமக்க தயாரா? --Anton·٠•●♥Talk♥●•٠· 13:36, 14 அக்டோபர் 2013 (UTC)Reply
அன்டன், இது போன்ற பல்வேறு யோசனைகளை ஆங்காங்கே குறித்து வைத்தால் பிறகு காலம், பங்களிப்பாளர்கள் கூடி வரும் போது செயற்படுத்தலாம். உடனே செய்ய வேண்டும் என்றில்லை.
  • தமிழ்நாடு / இலங்கை / தமிழர் தொடர்புடைய அறியப்பெற்றவர்கள் பலருடைய ஒளிப்படங்கள் இல்லை என்பது உண்மையான பிரச்சினை. ஏற்கனவே இருப்பவை பலவும் நியாயப் பயன்பாட்டுப் படிமங்கள். கட்டற்ற உரிமத்தில் இத்தகைய படிமங்களைப் பெற்றுக் கொள்வதே இத்தகைய நோக்கம்.
  • நோக்கம் வேறு என்பதால் வீச்சும் வேறாகவே இருக்கும். அனைத்து நாட்டுப் பங்களிப்பாளர்களும் பங்கு கொள்ளலாம். பெரும்பாலும் தொழில்முறை ஒளிப்படக்காரர்களை ஈர்ப்பது தான் சரி வரும் என்பதால் பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை / படிமங்களின் எண்ணிக்கை ஆகிய இரண்டும் முந்தைய போட்டியை விடக் குறைவாகவே இருக்கலாம். ஆனால், அது பிரச்சினை இல்லை. --இரவி (பேச்சு) 18:39, 14 அக்டோபர் 2013 (UTC)Reply
Return to the project page "நபர்களைப் பற்றிய நிழற்படப்போட்டி".