விக்கிப்பீடியா பேச்சு:விக்கி நற்பழக்கவழக்கங்கள்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by George46 in topic ஒரு பணிவான வேண்டுகோள்
ஒரு பணிவான வேண்டுகோள்
தொகுவிக்கிப்பீடியா நற்பண்புகள் பற்றிய உரையாடல் நடந்துகொண்டிருக்கும் வேளையில், விக்கியர்கள் எல்லாரும் சேர்ந்து, இக்கட்டுரையை மொழியாக்கம் செய்தால் நன்றாக இருக்குமோ என்று தோன்றியது. இவ்விதத்தில் தமிழ் விக்கிக்கு நல்ல, தரமான கட்டுரையும் கிடைக்கும்; பொன்போன்ற நேரமும் நன்முறையில் பயனாகும். நான் தொடங்கியிருக்கிறேன். கட்டுரையை வளர்த்தெடுப்போம். நன்றி!--பவுல்-Paul 18:25, 27 சனவரி 2012 (UTC)
- பவுல், மிகவும் பயனுள்ள முயற்சி. ஏற்கனவே விக்கிப்பீடியா:விக்கி நற்பழக்கவழக்கங்கள் என்று கொள்கைப் பக்கத்தில் ஒரு பக்கம் இருக்கின்றது. அதனை வளர்த்தெடுக்கலாம். ஆங்கில விக்கியில் மிகவும் பயனுடைய பற்பல பக்கங்களும் இருக்கின்றன. மணியனும் மிகவும் உதவக்கூடும். இப்பொழுதும் வருங்காலத்திலும் இவற்றின் தெளிவான வரைவுகள் தேவையாக இருக்கும். நன்றி. --செல்வா 18:54, 27 சனவரி 2012 (UTC)
- செல்வா, நீங்கள் கூறிய பக்கத்தைப் பார்த்தேன். நற்பழக்கவழக்கங்களின் அடிப்படைகளை எடுத்துரைக்க Wikipedia:Etiquette பயனுள்ளதாக இருக்கும் என்பது என் எதிர்பார்ப்பு.--பவுல்-Paul 21:49, 27 சனவரி 2012 (UTC)
- ஓ, சரி பவுல். முதலில் உருவாக்குவோம், பிறகு எங்கு எப்படி இணைப்பது, எதை இணைப்பது என்பது பற்றிப் பேசுவோம். இதுவரை நன்றாக வந்துள்ளதாக நினைக்கின்றேன். நானும் சேர்க்க முயல்வேன். --செல்வா 22:51, 27 சனவரி 2012 (UTC)
- இரவி கட்டுரைத் தலைப்பை மாற்றி, விக்கி நற்பழக்கவழக்கங்கள் பக்கத்தோடு இணைக்க பரிந்துரைத்துள்ளார். அவ்வாறே செய்யலாம் என்று நானும் கருதுவதால் மொழியாக்கத்தை நிறுத்திக்கொள்கிறேன்.--பவுல்-Paul 01:14, 28 சனவரி 2012 (UTC)