விக்டர் வான் எப்னர்

அண்டன் கில்பெர்ட் விக்டர் வான் எப்னர், ரிட்டர் வான் ரோபென்சுடைன் (Anton Gilbert Victor von Ebner, Ritter von Rofenstein) (பிப்ரவரி 4,1842-மார்ச் 20,1925) என்பவர் ஓர் ஆத்திரிய உடற்கூறியல் நிபுணரும் உயிரியலாளரும் ஆவார்.

விக்டர் வான் எப்னர்

இளமை

தொகு

விக்டர் வான் எப்னர் பிரெஜென்சைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

இவர் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். இங்கு இவர் பர்சென்ச்சாப்ட் ஹனோவெரா (சகோதரத்துவம்) உறுப்பினரானார். 1866ஆம் ஆண்டில் வியன்னா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

தொழில்

தொகு

எப்னர், கிராசு பல்கலைக்கழகத்தில் உயிரணுக்கள் மற்றும் வளர்ச்சித் துறையின் பேராசிரியராகவும், வியன்னா பல்கலைக்கழகத்தில் திசுவியல் பேராசிரியராகவும் இருந்தார்.[1]

ஆல்பர்ட் வான் கோலிகரின் ஹேண்ட்புச் டெர் கெவெபெலேஹ்ரெ டெசு மென்சென் (1899) ஆறாவது பதிப்பின் தொகுதி III-இன் தொகுப்பாசிரியராக இருந்தார். மனித உடற்கூறியல் மற்றும் திசுவியல் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் தவிர, இவர் விலங்கியல் மற்றும் தாவரவியல் துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.

உடற்கூறியல் கட்டமைப்புகள் பற்றிய இவரது மூன்று விளக்க நூல்கள் காரணமாக, சில உடற்திசுக்கள் இவருடைய பெயரால் அறியப்படுகின்றன.

  • வான் எப்னர் சுரப்பிகள் (எப்னர் சுரப்பிகள்): நாக்கின் பாப்பில்லாவில் காணப்படும் ஒரு வகைப் படலச் சுரப்பி
  • எப்னர் வரிகள்: பல், பற்காறையில் காணப்படும் குறுகிய கோடுகள் [2]
  • எப்னர் சிறுவலைப்பின்னல்: சுக்கிலச்சிறுகுழாயில் உள்ள உட்கரு உயிரணுக்களின் வலையமைப்பு

வெளியீடு

தொகு
  • Untersuchungen über den Bau der Samencanälchen und die Entwicklung der Spermatozoiden [Studies on the construction of the seminal tubules, and the development of sperm] (Leipzig, 1871)
  • Die acinösen Drüsen der Zunge [The acinus glands of the tongue] (Graz, 1873)
  • Über den feineren Bau der Knochensubstanz [On the finer structure of bone] (Sitzungsbericht der kaiserlichen Akademie der Wissenschaften, 1875)
  • Mikroskopische Studien über Wachsthum und Wechsel der Haare [Microscopic studies on the growth and changes of hair] (Ib. 1876)
  • Untersuchungen über die Ursachen der Anisotropie organisirter Substanzen [Studies on the causes of the anisotropy of organized substances] (Leipzig, 1882)
  • Über den feineren Bau der Skelettheile der Kalkschwämme etc. [On the finer structure of the skeletal parts of calcareous sponges] (Sitzungsbericht der kaiserlichen Akademie der Wissenschaften, 1887)
  • Histologie der Zähne [Histology of the teeth] in Julius Scheff's Handbuch der Zahnheilkunde (Wien, 1890)
  • Über den Bau der Chorda dorsalis der Fische [On the structure of the notochord in fish] (Sitzungsbericht der kaiserlichen Akademie der Wissenschaften, 1895 & 1896)[3]

மேற்கோள்கள்

தொகு
  1. https://histology.siu.edu/erg/circumvallate.htm
  2. Dean MC (1998). "Comparative observations on the spacing of short-period (von Ebner's) lines in dentine.". Arch Oral Biol 43 (12): 1009–21. doi:10.1016/s0003-9969(98)00069-7. பப்மெட்:9877332. https://pubmed.ncbi.nlm.nih.gov/9877332. 
  3. Pagel (1901). "Ebner, Victor G.". Biographical Dictionary Excellent Doctors of the Nineteenth Century. Urban & Schwarzenberg. 438–439. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டர்_வான்_எப்னர்&oldid=4162173" இலிருந்து மீள்விக்கப்பட்டது