விக்டோரியம்

விக்டோரியம் [1] (Victorium) கடோலினியம் மற்றும் டெர்பியம் ஆகிய தனிமங்களின் கலவையாகும். முதலில் இதற்கு மோனியம் என்று பெயரிடப்பட்டது. 1898 ஆம் ஆண்டு ஆங்கில வேதியியலாளர் வில்லியம் குரூக்சு பிரித்தானிய அறிவியல் முன்னேற்ற சங்கத்தின் தலைவராக இருந்தபோது தொடக்க உரையில் தனது கண்டுபிடிப்பைக் குறித்து தெரிவித்தார். தனித்துவமான நின்றொளிர்தல் மற்றும் பிற புற ஊதா-கட்புலனாகும் நிறமாலை நிகழ்வுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் ஒரு புதிய வேதியியல் தனிமம் என இதை அவர் அடையாளம் கண்டார். இருப்பினும் பின்னர் இது தவறானது என்று காட்டப்பட்டது. மோனியம் என்ற சொல்லுக்கு "தனியாக" என்று பொருள் ஆகும். ஏனெனில் அதன் நிறமாலை கோடுகள் புற ஊதா நிறமாலையின் முடிவில் தனியாக நின்றன [2]. விக்டோரியா மகாராணியின் சமீபத்திய வைர விழாவை முன்னிட்டு 1899 ஆம் ஆண்டில் குரூக்சு கண்டுபிடித்த தனிமத்திற்கு விக்டோரியம் என்று பெயர் மாற்றினார். இத்தனிமத்திற்கு Vc என்ற குறியீட்டையும் ஒதுக்கினார்.1905 ஆம் ஆண்டில் பிரெஞ்சு வேதியியலாளர் சியார்ச்சசு அர்பேன் விக்டோரியம் ஒரு தனித்துவமான தனிமம் அல்ல என்றும் மாறாக அது கடோலினியத்தின் தூய்மையற்ற நிலை என்பதையும் நிருபித்தார் [3].

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டோரியம்&oldid=3583366" இலிருந்து மீள்விக்கப்பட்டது