விக்டோரியா (தாவரம்)
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இது மிகப்பெரிய வியக்கத்தக்க இலை கொண்ட நீர்த்தாவரம் ஆகும். இதன் மட்டத்தண்டு கிழங்கு சேற்றில் புதைந்திருக்கும். நீர் நிலைவற்றி செடி காய்ந்து போனாலும், கிழங்கில் உயிர் நிலைத்திருக்கும். திரும்பி நீர் வந்ததும் கிழங்கிலிருந்து புதிய இலை, பூ வரும். கிழங்கிலிருந்து வேர்கள் சேற்றுக்குள் வளரும். இது வளர்வதற்கு மிகப் பெரிய நீர் நிலைகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு தாவரத்திலிருந்தும் சுமார் 40-45 இலைகள் தோன்றுகின்றன. இவ்விலைகள் மிகப் பெரிய ஒரு தட்டு போல் காட்சி அளிக்கின்றன. மிகப் பெரியதாக வளர்ச்சியடைந்த ஓர் இலை 6-7 அடி விட்டம் கொண்டது. ஓரம் தட்டு போல் மேல் வளைந்திருக்கும். இது 7 செ.மீ. இருக்கும். இவ்விலைகள் 68-85 கிலோ எடை தாங்கக் கூடியன. ஏறி உட்கார்ந்தால் இது கிழிவது இல்லை. இதில் 20 முதல் 40 வரை பூக்கள் வரும். இப்பூக்கள் ஓர் அடி அகலம் கொண்ட வெள்ளை ரோஜா நிறமும் மிக வாசனையும் உடையன. இவைகளில் 400 முதல் 600 விதைகள் வரை காணப்படும். விதைகளை வறுத்து உண்கிறார்கள். இவற்றில் 3 இனங்களுண்டு. அயின மண்டல அமெரிக்காவிலும், அமேசான் ஆற்றிலும் வளர்கிறது. இதை முதன் முதலில் 1801 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் கண்டனர். பிறகு 1837ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்றனர். இதற்குப் புகழ் பெற்ற மகாராணி விக்டோரியாவின் பெயரை வைத்தனர்.
விக்டோரியா | |
---|---|
மலர்ந்த விக்டோரியா ஆம்ஸ்டர்டாமில் Hortus Botanicus Ellie Swindells | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | விக்டோரியா (plant) |
Species | |
மேற்கோள்
தொகு[1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001
- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.