விசாரணை ஆணையம்

இந்தியாவில் ஒன்றிய, மாநில அரசுகள் அமைக்கும் விசாரணை ஆணையங்களுக்கு 1952 ஆத் ஆண்டு இயற்றபட்ட விசாரணை ஆணையச் சட்டம் வழிகாட்டுகிறது. இதற்கான விதிமுறைகள் 1972 இல் உருவாக்கபட்டன.[1] இந்த சட்டம் மூலம் விசாரணை ஆணையம் அமைக்கவும், அதற்கு உரிய சில அதிகாரங்களை வழங்கவும் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. விசாரணை ஆணையச் சட்டம்- 1972 பிரிவு 3ன்படி ஆணையம் அமைக்க உரிய அரசிற்கு அதிகாரம் உள்ளது. அந்த அரசு எப்போது தேவை என்று கருதுகிறதோ அப்போது சட்டமன்றத்தில் சட்ட வரைவு மசோதா கொண்டு வரலாம். அதன் பிறகு அதனை அரசிதழில் அறிவிக்கை மூலம் வெளியிட வேண்டும். இது போல் நடுவண் அரசு, ஆணையம் அமைக்க விரும்பும் போது பாராளுமன்றத்தில் அதற்கான மசோதாவைக் கொண்டு வந்து அதற்கான உத்தரவை அரசிதழில் வெளியிடப்ப வேண்டும். மானில அரசு அமைத்தால் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட வேண்டும்.

நோக்கம்

தொகு

விசாரணை ஆணையம் அமைப்பதன் நோக்கம்

  1. பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்து விசாரணை செய்யவும்
  2. அரசிதழில் குறிப்பிட்ட வேறு எந்த குறிப்பிட்ட செயலுக்காகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யவும் ஆணையம் அமைக்கப்படலாம்.

விசாரணை ஆணையத்தின் உரிமைகள்

தொகு

விசாரணை ஆணையத்திற்கு தலைவராக ஒருவர் இருப்பார். விசாரணை ஆணையத்திற்கு உரிமையியல் நீதிமன்றத்திற்குரிய உரிய அனைத்தும், உரிமையியல் வழக்கு விசாரணை நடைமுறைப்படி நடவடிக்கை உண்டு.

விசாரணை ஆணையம் சட்டம் பிரிவு 4-ன்படி

  1. தேவையான நபர்களை தம்முன் நேர்நிலையாகும்படி உத்தரவிடலாம்.
  2. உறுதிமொழி மீது விசாரணை செய்யலாம்.
  3. தன்னிலை விளக்கும் உறுதிமொழிப் பத்திரம் மீது சான்றுரைக்கலாம்.
  4. தேவையான ஆவணங்களைக் கண்டுபிடித்துச் சமர்ப்பிக்கக் கோரலாம்.
  5. அரசின் பொதுப் பதிவுருக்களைச் சமர்ப்பிக்கக் கோரலாம்.
  6. சான்றுரையாளரிடமிருந்து சான்றுரை பெற ஆணை அனுப்பலாம்.
  7. தேவைப்பட்ட எப்பொருள் மீதும் விசாரணை செய்யலாம்.
  8. தன்னுடைய நடைமுறையைத் தானே உருவாக்கிக் கொள்ளலாம்.
  9. விசாரணை ஆணையம், தனது விசாரணைக்குப் பின்பு விசாரணை அறிக்கையை முழுமை செய்து உரிய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேல் தகவல்கள்

தொகு

விசாரணை ஆணையம் நிர்வாக அதிகாரம் பெற்றது. அவைகள் நீதி முறையில், பொதுநலன், பொது முக்கியத்துவம் வாய்ந்தவைகள் குறித்து விசாரணை செய்கிறது. இந்த விசாரணை ஆணையத்தினை இந்தியக் குடியரசுத் தலைவர் அமைப்பார்.பொதுவான அடிப்படைக் காரணங்கள் இருந்தால் அவை குறித்தே விசாரணை செய்யும். பொதுவான விசாரணை அனைவருக்கும் தெரியும்படி இருக்காது. மேலும் இது குறுகிய எண்ணிக்கையுடைய நபர்களிடம் மட்டுமே இருக்கும். ஏனெனில், இவை பொதுமக்களின் ஆவல்களையும் , உணர்வுகளையும் தூண்டி விடலாம். அப்போது அமைதி குலைய வாய்ப்பிருக்கிறது. மேலும் விசாரணை ஆணையம், ஆணையம் விசாரணை செய்ய அமரும் நேரம், காலம், இடம் முதலியவைகளைக் குறிப்பிட்டு அறிவிக்கை வெளியிடும்.

குறிப்புகள்

தொகு
  1. "சொல்… பொருள்… தெளிவு: விசாரணை ஆணையங்கள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-11-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசாரணை_ஆணையம்&oldid=3597006" இலிருந்து மீள்விக்கப்பட்டது