விசிட்ட சேவா பதக்கம்
விசிட்ட சேவா பதக்கம் (Vishisht Seva Medal அல்லது VSM) இந்தியாவின் அமைதிகாலத்தில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான ஓர் உயரிய படைத்துறை விருதாகும். இந்த விருது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [1] 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைதிப்பணிகளுக்கு வழங்கப்படுகிறது.இந்த விருது மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படக்கூடியதாகும்.
விசிட்ட சேவா பதக்கம் | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | அமைதிக்காலப் பணி | |
பகுப்பு | சிறப்புமிகு சேவை | |
நிறுவியது | சனவரி 26, 1960 | |
வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
விவரம் | படைத்துறையின் அனைத்து பிரிவினரக்கும் | |
முந்தைய பெயர்(கள்) | விசிட்ட சேவா பதக்கம், வகுப்பு III. (சனவரி 27, 1967 வரை) | |
முகப்பு | மையத்தில் ஐம்முனை நட்சத்திரம் கூடிய 35 மி.மீ வட்டவடிவ பதக்கம். நேரான பட்டயத்திலிருந்து தொங்கவிடப்பட்டது; பக்கவாட்டில் பெயர். | |
பின்புறம் | மேலே இந்தியில் விருது பெயருடன் கீழே அரசு இலச்சினை. இந்தியில் "விசிட்ட சேவா பதக்கம்" | |
நாடா | 32 மிமீ, 2 மிமீ கருநீல பட்டைகளுடன் கூடிய மஞ்சள் நாடா |
இந்தப் பதக்கம் துவக்கத்தில் "விசிட்ட சேவா பதக்கம், வகுப்பு III" என வழங்கப்பட்டது[2]. 1967ஆம் ஆண்டு முதல் தற்போதையப் பெயரில் அழைக்கப்படுகிறது. பதக்க வடிவமைப்பில் இதனால் எந்த மாறுதல்களும் இல்லை. 1980ஆம் ஆண்டு முதல் போர்க்காலச் சிறப்புப் பணிகளுக்கு யுத் சேவா பதக்கம் வழங்கப்படுவதால்[2] இந்த விருது போரற்ற அமைதிக்காலப் பணிச் சிறப்பிற்காக வழங்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vishist Seva Medal & Sarvottam Yudh Seva Medal". bharat-rakshak.com. Archived from the original on 2007-11-11. பார்க்கப்பட்ட நாள் 2011-05-21.
- ↑ 2.0 2.1 Ed Haynes. "Vishisht Seva Medal". Archived from the original on 2007-07-27. பார்க்கப்பட்ட நாள் 2011-05-21.