விசினல்
விசினல் (vicinal) (இலத்தீன்: விசினசு = அண்டையர் ) என்பது ஏதாவது இரண்டு வேதி வினைக்குழுக்கள் அடுத்தடுத்த (அதாவது 1,2 உறவுமுறை) கார்பன் அணுக்களுடன் இணைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. உதாரணமாக 2,3-இருபுரோமோபியூட்டேன் மூலக்கூறு இரண்டு விசினல் புரோமின் அணுக்களைச் சுமந்திருக்கிறது ஆனால், 1,3-இருபுரோமோபியூட்டேன் .[1] விசினல் புரோமின்களைப் பெற்றிருக்கவில்லை.
அதேபோல ஓரிட-இருபுரோமைடு, இதிலுள்ள முன்னொட்டு ஓரிட என்பது ஓரிடத்த என்பதன் சுருக்கமாகும். இரண்டு புரோமின் அணுக்களும் ஒரே அணுவுடன் பிணைந்துள்ளன (அதாவது 1,1 உறவுமுறை) என்பது இதன் பொருளாகும். உதாரணமாக, 1,1-இருபுரோமோபியூட்டேன் ஓரிடத்தனவாகும். இதேபோல 1,3-உறவுமுறை தொகுதிகளுக்கு ஒன்றடுத்த என்ற பெயர் பரிந்துரைக்கப்படுகிறது.
நேர், எதிர், வெளி, உள் போன்ற சொற்களும் இதே தத்துவத்தில் உருவான சொற்களாகும். விசினல் என்ற சொல்லின் விளக்கம், மூலக்கூறின் வேறுபட்ட பகுதிகள் ஒன்றுக்கொன்று எவ்வாறு அமைப்போடும் இடத்தோடும் தொடர்பு கொண்டுள்ளன என்பதை விளக்குகிறது. விசினல் என்ர பெயரடை சிலசமயங்களில் ஒத்த வேதி வினைகுழுக்களின் மூலக்கூறுகளைக் குறிக்கவும் சுருக்கப்படுகிறது. மேலும், இச்சொல் அரோமாட்டிக் வளையங்களின் மீது பதிலீடு செய்யப்படுவதையும் குறிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Nickon, Alex; Silversmith, Ernest F. (1987). Organic Chemistry: The Name Game. New York: Pergamon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-034481-X.