விசுவநாதர் காசிப்பிள்ளை

விசுவநாதர் காசிப்பிள்ளை (1849 பெப்ரவரி 12 - செப்டெம்பர் 1936) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரச சட்டத்தரணியும், யாழ் இந்துக் கல்லூரியை நிறுவியவர்களில் ஒருவரும் ஆவார்.

இளமைக் காலம்தொகு

காசிப்பிள்ளை 1849ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் விநாயகர் விசுவநாதர், தாயார் பெயர் ஐயம்பிள்ளை. பள்ளிக்கல்வியை சுண்டிக்குளி செமினரியில் பெற்றுக்கொண்ட காசிப்பிள்ளை, மேற்படிப்புக்காக 1867ல் மதராசுக்குச் சென்றார் (தற்போதைய சென்னை). பின்னர் சட்டத்துறையில் தொழில் செய்ய எண்ணிய அவர் வழக்கறிஞரான சி. பிரிட்டோவின் கீழ் பயிற்சி பெற்றுச் சட்டத்தரணியானார்.[1]

குடும்பம்தொகு

இவர் மூத்ததம்பி என்பவரின் மகளான பார்வதிப்பிள்ளை என்பவரை மணம் செய்துகொண்டார். இவர்களது மகன் அருளம்பலம், மகள் இராசம்மா. காசிப்பிள்ளையின் உடன்பிறந்தாரான ஆறுமுகமுத்தின் மகன்கள் கதிரவேலு, கனகரத்தினம் ஆகியோரும் யாழ்ப்பாணத்தில் பொதுச் சேவையில் ஈடுபட்டுப் புகழ் பெற்றவர்கள். கதிரவேலுவின் ஒரு மகன் க. சிற்றம்பலம் இலங்கை அரசில் மந்திரியாகப் பணியாற்றியவர். இன்னொரு மகன் க. பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தின் முன்னாள் நகர முதல்வர்.

தொழில்தொகு

1876 தொடக்கம் ஆறு ஆண்டுகள் மன்னாரில் தொழில் செய்த காசிப்பிள்ளை 1882ல் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பினார். அரச சட்டத்தரணியாக நியமிக்கப்பட்ட அவர் நீதவான் நீதிமன்றத்திலும், மாவட்ட நீதிமன்றத்திலும் நிதிபதியாகப் பணியாற்றியுள்ளார். யாழ் இந்துக் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவரான இவர் அதன் முகாமையாளராகவும் பின்னர் பணிப்பாளராகவும் பணியாற்றினார். சைவ பரிபாலன சபையின் செயலாளராகவும், 1895 முதல் 1915 வரை "இந்து போர்ட்" எனப்படும் இந்துக் கல்விச் சபையின் முகாமையாளராகவும் இருந்தார்.[1]

இறப்புதொகு

இவர் 1936ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் காலமானார்.[1]

மேற்கோள்கள்தொகு