விசுவநாத சாஸ்திரி

விசுவநாத சாஸ்திரியார் (Visvanatha Sastriyar) (அல்லது விஸ்வநாதன்) (1756-1845) இலங்கை தமிழர் வழியைச் சார்ந்த தமிழ் கவிஞர் மற்றும் வானியலாளர் ஆவார். சர் எமர்சன் டென்னன்ட் இவரை "இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற வானியல் நிபுணர்" என அழைத்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

1756 இல்விசுவநாத சாஸ்திரி தமிழ் பிராமண குடும்பத்தில் யாழ்ப்பாணத்திற்கு அருகில் வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள அராலி நகரில் நாராயண சாஸ்திரிக்கு மகனாகப் பிறந்தார்..[1]

வான சாஸ்திரி தொகு

விஸ்வநாதன் இறக்கும்வரை ஆண்டுதோறும் பஞ்சாங்கத்தை வெளியிட்டார். அவர் வெளியிட்ட பஞ்சாங்கம் மிகத் துல்லியத்திற்காக அறியப்பட்டது.[1] விஸ்வநாதன் தனது பணிக்காக பாராட்டப்பட்டார், விஸ்வநாதனின் துல்லிய நுணுக்கமான பணியைக் கண்டு,நாளாம் சார்ச் தனது மாட்சிமையின் வானியல் நிபுணராக நியமித்தார். சர் எமர்சன் டென்னன்ட், "கிறிஸ்டியானிட்டி இன் சிலோன்" என்னும் தனது புத்தகத்தில் விஸ்வநாத சாஸ்திரி பற்றி எழுதியுள்ளார்.

இலங்கையின் மிகவும் போற்றப்படும் வானவியல் நிபுணர் எனவும் அவர் தனது முன்னோர்களின் திரட்டப்பட்ட அறிவியல் நுணுக்கங்களை ஆராய்ந்து ஒருமைப்படுத்தினார். ஒன்பது தலைமுறையாக அவர் குடும்பம் வானியல் பற்றி ஆராயும் குடும்பமாக இருந்தது.[1]

இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் அவரது கணிப்புகள் தவறாக நிரூபிக்கப்பட்டுள்ளது.[2] மார்ச் 21, 1828 இல் ஒரு சந்திர கிரகணத்தின் அவரது கணிப்பு பதினைந்து நிமிடங்கள் தவறாக இருந்தது.[2] சந்திர கிரகணத்தின் தன்மையைப் பற்றிய அவரது கணிப்பு தவறாக நிரூபிக்கப்பட்டதால், இவர் கணித்த கிரகணத்தின் கோள்களும் தவறு என நிருபிக்கப்பட்டது. அவரது கணிப்பின்படி எட்டில் - ஐந்து அல்ல எட்டில் - மூன்று என நிருபிக்கப்பட்டது.[2]

கவிஞர் தொகு

விஸ்வநாதன் பல கவிதை படைப்புகள் எழுதியுள்ளார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சோழர் காலத்து புராணத்தைப் பாடியதும் மாயாவிகுருவன்ஜி மற்றும் குருநாதர் கில்லியுதூது இந்து தேவனான முருகனைப் பற்றி புகழ்ந்து பாடிய கவிதைகளும் குறிப்பிடத்தக்கது.

இறப்பு தொகு

விஸ்வநாத் சாஸ்திரி 1845 ஆம் ஆண்டில் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 The Tamil Plutarch, Pg 117
  2. 2.0 2.1 2.2 The Tamil Plutarch, Pg 118
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவநாத_சாஸ்திரி&oldid=3644227" இருந்து மீள்விக்கப்பட்டது