விசுவ குமார் குப்தா
விசுவ குமார் குப்தா (Vishwa Kumar Gupta) என்பவர் ஓர் இந்திய ஓமியோபதி மருத்துவராவார். இவர் புதுடெல்லியில்[1] அமைந்துள்ள நேரு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.[2] மருத்துவத் துறையில் குப்தாவின் சிறந்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ விருதை 2013 ஆம் ஆண்டு குப்தாவுக்கு வழங்கி கவுரவித்தது.[3].
விசுவ குமார் குப்தா Vishwa Kumar Gupta | |
---|---|
பிறப்பு | கான்பூர், இந்தியா |
பணி | ஓமியோபதி மருத்துவர் |
பெற்றோர் | ஓம் பிரகாசு குப்தா |
விருதுகள் | பத்மசிறீ |
வாழ்க்கை
தொகுஓம் பிரகாசு குப்தாவின் மகனாகிய விசுவ குமார் குப்தா கான்பூரைச் சேர்ந்தவர்.[4] இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் மாற்று மருத்துவத் துறையான ஓமியோபதி துறையில் பட்டம் பெற்றார். [4] குப்தா புதுதில்லியில் உள்ள நேரு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவ பணியை ஆரம்பித்து அங்கேயே கல்லூரியின் முதல்வராக பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.[1]
இந்திய ஓமியோபதி மருத்துவர்கள் நிறுவனத்தின் தலைவராக குப்தா 1998 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இரண்டு ஆண்டு காலம் பொறுப்பு வகித்தார்.[1] 1990 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை [1] மத்திய ஓமியோபதி மன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.[5] இவை தவிர குப்தா இந்திய அரசு சார்பாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரகம் திட்டமிடும் பல்வேறு திட்டங்களுக்காக பல குழுக்களில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1] [1] இந்திய குடியரசு தலைவருக்கு கவுரவ மருத்துவராகவும் சிறிது காலம் இருந்தார்.[1]
குப்தா பல தேசிய மற்றும் பன்னாட்டு மாநாடுகளில் பங்கேற்று தன்னுடைய அறிவியல் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.[1] மேலும் 2013 ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்ம சிறீ விருது பெற்றார்.[3] புதுதில்லியில் உள்ள ராசோரி கார்டனில் வசிக்கிறார்.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "Similima". Similima. 2013. Archived from the original on 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
- ↑ "NHMC". NHMC. 2014. Archived from the original on 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
- ↑ 3.0 3.1 "Padma 2013". Press Information Bureau, Government of India. 25 January 2013. பார்க்கப்பட்ட நாள் 10 October 2014.
- ↑ 4.0 4.1 4.2 "Delhi Homoeo Board". Delhi Homoeo Board. 2014. Archived from the original on 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
- ↑ 5.0 5.1 "Central Council of Homoeopathy". Central Council of Homoeopathy. 2014. Archived from the original on 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
புற இணைப்புகள்
தொகு- "Padma Awards List". Indian Panorama. 2014. பார்க்கப்பட்ட நாள் 12 October 2014.