விசைக்கோடு

விசைக்கோடு ( line of force ) ஒரு காந்தப்புலத்தில் ( மின்புலத்தில்) தானே நகரும் தன்மையுடைய ஒர் அலகு வடமுனை (நேர்மின்னூட்டம்) பயணிக்கும் பாதை காந்தவிசைக் கோடு (மின்விசைக்கோடு) எனப்படும். விசைக்கோட்டின் எந்த ஒரு புள்ளியிலும் வரையப்படும் தொடுவரை விசையின் திசையினைக் காட்டும்..விசைக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டுவதில்லை.

விசைக்குழாய் ( Tube of force ) என்பது ஒரு கோட்பாட்டியல் கருத்தாகும். ஒரு சிறிய பரப்பிலுள்ள ஒவ்வொரு புள்ளியிலும் வெளிப்படும் விசைக் கோடுகளைச் சேர்பதால் தோன்றுவதாகக் கொள்ளப்படும் கற்பனைக் குழாயாகும்.

A dictionary of science

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசைக்கோடு&oldid=2746150" இலிருந்து மீள்விக்கப்பட்டது