விஜயதுர்கை

விஜயதுர்கை (Vijayadurga) என்பது இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் மாறுபட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இந்து தெய்வமாகும். சிவனுக்கும், விஷ்ணுவிற்கும் இடையிலான போரில் இவள் தலையிட்டதாகவும், அங்குள்ள பிராமணர்களைத் துன்புறுத்தும் பேய்களைக் கொல்ல சங்க்வாலிக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. சான்கோலில் இருந்த அனைத்து பேய்களையும் அழித்தபோது, இவர் விஜயா என்ற பெயரைப் பெற்றார். மேலும் இவருக்கு விஜயதுர்கை என்று பெயரும் வழங்கப்பட்டது. தெய்வம் இவ்வாறு துர்கா தேவியின் ஒரு வடிவமானது. விஜயதுர்கை கோயில் ஒரு காலத்தில் சான்கோலேவில் சன்க்லேஸ்வரி சாந்ததுர்கா மற்றும் லட்சுமிநர்சிம்மன் ஆகியோருக்கு அருகிலேயே அமைந்திருந்தது. ஆனால் கோவாவின் போண்டா தாலுகாவிலுள்ள கெரிம் என்ற இடத்திற்கு மாற்றப்பட வேண்டியிருந்தது.

கோவாவில் உள்ள விஜயதுர்கை கோயில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயதுர்கை&oldid=2930663" இலிருந்து மீள்விக்கப்பட்டது