விஜயபால் சிங்

விஜய்பால் சிங் (Vijaipal Singh)(பிறப்பு 17 சனவரி 1945) இந்தியாவின் உத்தராகண்ட மாநிலத்தின் அரித்துவார் மாவட்டத்தில் உள்ள நர்சான் கலானில் பிறந்தவர் ஆவார். இவர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக விவசாய அறிவியலாளர் ஆவார். மேலும் அரிசி மரபியல் மற்றும் இனப்பெருக்க அறிவியலில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார்.[1] மிகவும் பிரபலமான பாசுமதி அரிசி வகையான பூசா பாசுமதி 1121-ஐ உருவாக்குவதில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.[2] ஆக்ரா பல்கலைக்கழகத்தில் வேளாண் தாவரவியலில் முதுநிலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்ற இவர், 1968ஆம் ஆண்டில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளராகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்விதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகளை சிங் வெளியிட்டுள்ளார்.[3] நாட்டுக்கு இவர் செய்த சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், 2012ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[4]

விஜயபால் சிங்
பிறப்பு17 சனவரி 1945
நர்சன் கலான், அரித்துவார் மாவட்டம், உத்தரகண்டம், இந்தியா
துறைமரபியல் & பயிர் பெருக்கம்
பணியிடங்கள்இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், புது தில்லி
கல்வி கற்ற இடங்கள்ஆக்ரா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபுசா பாசுமதி 1121 அரிசி வகை
விருதுகள்பத்மசிறீ

விருதுகளும் கௌரவங்களும்

தொகு
 
முனைவர் விஜயபால் சிங், இந்திய குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா பாட்டீலிடமிருந்து பத்மசிறீ விருதை 4 ஏப்ரல் 2012 அன்று பெற்றபோது

வி. பி. சிங், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும அரி ஓம் ஆசிரம அறக்கட்டளை விருது (1974-75), ஜவகர்லால் நேரு விருது (1977), பி. பி. பால் நினைவு விருது (2005), பயிர் மேம்பாட்டில் இவேஆகு விருது (2007), இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் மூன்றாம் ராவ் பகதூர் பி விசுவநாத் விருது (2006-07), பத்மசிறீ (2012)[5], சிறீ. ஓ. பி. பாசின் நினைவு விருது (2012), அரிசி ஆராய்ச்சி தொழிலாளர்கள் சங்கம் (மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம், கட்டாக்) விருது (2019), பாசுமதி ரத்தன் விருது (2019) விருதுகளையும் பெற்றுள்ளார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "National Academy of Agricultural Sciences". National Academy of Agricultural Sciences. 2022. பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.
  2. Vijaipal Singh; Ashok Kumar Singh; Trilochan Mohapatra; Gopala Krishnan S; Ranjith Kumar Ellur (2018). ""Pusa Basmati 1121 – a rice variety with exceptional kernel elongation and volume expansion after cooking"". Rice 11 (19). doi:10.1186/s12284-018-0213-6. 
  3. Rita Arora; Pinky Agarwal; Swatismita Ray; Ashok Kumar Singh; Vijay Pal Singh; Akhilesh K Thyagi; Sanjay Kapur (July 2007). "MADS-box Gene family in Rice: genome-wide identification, organization and expression of profiling during reproductive development and stress". BMC Genomics 8 (242): 242. doi:10.1186/1471-2164-8-242. பப்மெட்:17640358. 
  4. 4.0 4.1 "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  5. "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

வார்ப்புரு:Padma Shri Award Recipients in Science & Engineering

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயபால்_சிங்&oldid=4136563" இலிருந்து மீள்விக்கப்பட்டது