விஜயா இராமச்சந்திரன்

விஜயா இராமச்சந்திரன் (Vijaya Ramachandran) ஓர் இந்திய அமெரிக்க கோட்பாட்டு கணினி அறிவியல் ஆய்வாளர். இவர் வரைபட அல்காரிதம் மற்றும் இணை அல்காரிதம் பிரிவில் ஆய்வி மேற்கொண்டு வருகிறார். இவர் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணினிப் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

கல்வி மற்றும் தொழில்

தொகு

விஜயா தனது முனைவர் பட்டத்தினை 1983-இல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் ரிச்சர்ட் லிப்டன் மேற்பார்வையில் பேரளவு ஒருங்கிணைச் சுற்று மற்றும் ஒப்புருவாக்கம் குறித்து ஆய்வு அறிக்கையினை வழங்கினார்.[1]:{{{3}}}

விஜயா 1983-இல் இலினொய் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் கணினி பொறியியல் துறையில் உதவி பேராசிரியராக சேர்ந்தார். மேலும் 1989-இல் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இவர் 1995-இல் வில்லியம் பிளேக்மோர் II ரீஜண்ட்ஸ் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[2]:{{{3}}}

அங்கீகாரம்

தொகு

2013-இல், தில்லி பல்கலைக்கழகம் விஜயா இராமச்சந்திரனை கௌரவப் பேராசிரியராக நியமித்தது.[3]:{{{3}}}

மேற்கோள்கள்

தொகு
  1. கணித மரபியல் திட்டத்தில் விஜயா இராமச்சந்திரன்
  2. Curriculum vitae (PDF), பார்க்கப்பட்ட நாள் 2021-06-27
  3. Professor Vijaya Ramachandran Selected as Honorary Professor, University of Texas at Austin, February 1, 2013, பார்க்கப்பட்ட நாள் 2021-06-27

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயா_இராமச்சந்திரன்&oldid=3886954" இலிருந்து மீள்விக்கப்பட்டது