விஜய்கர் கோட்டை
விஜய்கர் கோட்டை (Vijaygarh Fort) என்பது இந்தியா உத்தரப்பிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ராபர்ட்சுகஞ்சில், சத்ரா-சில்தாம் சாலையில் தந்திரால் அணைக்கு அருகே சத்ரா தொகுதியில் உள்ள மவு கலான் கிராமத்தில் தென்கிழக்கு திசையில் அமைந்துள்ள பாழடைந்த கோட்டை ஆகும். இது இராபர்ட்சுகஞ்சியிலிருந்து 30 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]
விஜய்கர் கோட்டை विजयगढ़ किला Vijaygarh | |
---|---|
சோன்பத்ரா | |
மலையில் விஜய்கர் கோட்டை | |
ஆள்கூறுகள் | 24°34′40″N 83°10′51″E / 24.577708°N 83.180845°E |
இடத் தகவல் |
வரலாறு
தொகுவிஜய்கர் கோட்டையினை ஆண்ட கடைசி ஆட்சியாளர் பெனாரசின் ராஜா சைத் சிங் ஆவார். ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையினைக் கைப்பற்றும் வரை இவர் இங்கு ஆட்சி செய்தார். இந்தக் கோட்டை மயக்கும் வகையில் உள்ளதாகக் கருதப்படுவதோடு, மற்றொரு கோட்டை இதன் கீழ் மறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கோட்டையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஒரு கல்லறை உள்ளது. இது அசுரத் மீரான் சா பாபா என்று பிரபலமாக அறியப்படும் சையத் ஜெயின்-உல்-அப்தின் மீர் சாகிப்பின் கல்லறை என்று கூறப்படுகிறது. கல்லறைக்கு அருகில் மீரா சாகர் மற்றும் இராம் சாகர் என்று அழைக்கப்படும் இரண்டு குளங்கள் உள்ளன. இவை ஒருபோதும் வறண்டு போவதில்லை.
சுற்றுலா இடங்கள்
தொகுவிஜய்கர் கோட்டையில் பல பழைய கோயில்கள் மற்றும் சிவப்புக் கல் தூண்கள் உள்ளன. இவை சமுத்திரகுப்தரின் விஷ்ணுவர்தன் நிலப்பிரபுத்துவத்தின் கல்வெட்டுகளைக் கொண்டுள்ளன. இந்தக் கோட்டை இதன் பாறை கல்வெட்டுகள், குகை ஓவியங்கள், சிலைகள் மற்றும் வற்றாத குளங்களுக்காகப் பிரபலமானது. கோட்டை வளாகத்திற்குள் நான்கு குளங்கள் உள்ளன. இவை ஒருபோதும் வறண்டு போவதில்லை. விஜய்கரின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி கைமூர் மலைத்தொடரின் செங்குத்தான மற்றும் கரடுமுரடான மலைகளால் சூழப்பட்டுள்ளது. இரண்டு குளங்களுக்கு இடையில் ரங் மகால் என்று அழைக்கப்படும் ஒரு அரண்மனை இருந்தது. இது பாறையில் கலைச் சிற்பங்களைக் கொண்டிருந்தது. இளவரசி சந்திரகாந்தாவின் அரண்மனையாக இது கருதப்பட்டது.[2]
ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் ஒரு கண்காட்சி (உர்சு) ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் பல்வேறு மதங்கள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொள்கிறார்கள்.
விஜய்கர் கோட்டை வரலாற்று மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தேவகி நந்தன் கத்ரி எழுதிய சந்திரகாந்தா நாவலில் இந்தக் கோட்டையும் இளவரசி சந்திரகாந்தாவும் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
இந்து மாதமான திருவோணத்தில், கான்வரியர்கள் (கான்வார் புனிதப் பயணம் செல்லுபவர்) ராம் சாகரிலிருந்து தண்ணீர் சேகரித்து பின்னர் சிவ்தாருக்கு தங்கள் புனித பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
படங்கள்
தொகு-
விஜய்கர் கோட்டையில் விநாயகர் சிலை
-
விஜய்கர் கோட்டையில் பாழடைந்த கட்டட நுழைவாயில்
-
விஜய்கர் கோட்டையின் நுழைவாயில்
-
விஜய்கர் கோட்டையில் ஏரி
-
விஜய்கர் கோட்டையில் உள்ள ஏரி
-
விஜய்கர் கோட்டையின் உச்சியிலிருந்து
-
விஜயகர் கோட்டையில் பாழடைந்த கட்டிடம்
-
கோட்டையில் சிவலிங்கம் மற்றும் பார்வதி தேவியின் சிலை
-
விஜய்கர் கோட்டையின் சுவர்கள்
-
கோட்டையில் உடைந்த அறைகள்
-
பாழடைந்த கட்டிட வளாகம்
-
விஜய்கர் கோட்டையில் பாழடைந்த கட்டிடத்தின் தூண்கள்
-
கோட்டை மற்றும் தன்ரவுல் அணையின் சுவர்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Official Website of UP Ecotourism". www.upecotourism.in. பார்க்கப்பட்ட நாள் 2024-04-09.
- ↑ "Vijaygarh Fort, Varanasi - Timings, History, Best time to visit". Trawell.in. பார்க்கப்பட்ட நாள் 2024-04-09.
- http:sonbhadra.nic.in/PrincesChandrakanta.aspx
- சந்திரகாந்தா மூலம் தேவகி நந்தன் கத்ரி