விஜய கந்தகோபாலன்

காஞ்சிபுரத்தில் இருந்து ஆண்ட ஒரு மன்னன்

விஜய கந்தகோபாலன் (Viajaya Ganda Gopalan) என்பவர் காஞ்சிபுரத்தை ஆண்ட சோழ அரசராவார்.

கல்வெட்டுகளில் இவரது முழுப்பெயராக  'திரிபுவனச்சக்கரவர்த்திவ விஜய கந்தகோபால தேவர்' என குறிப்பிடப்படுகிறார். இவர் தன்னை 'காஞ்சியின் அரசன்' என்று அழைத்துக் கொண்டார். இவரது ஆட்சியானது கி.பி. 1250 இல் தொடங்கி பெரும்பாலும் தன்னுரிமை ஆட்சியாளராக இருந்துள்ளார். இவரது இராச்சியமானது 1250-1291 காலகட்டத்தின் போது முதன்மையான வளர்ச்சி  கண்டது. காஞ்சிப் பகுதியானது அவப்போது தெலுங்கு சோழர்கள், கக்காதீயர், காடவ கோப்பெஞ்சிங்கன்,  பாண்டியர் ஆகியோரின்  ஆகியோரின் கைகளுக்கு அவ்வப்போது கைமாறியது. இருப்பினும், இந்த ஆட்சி மாற்றங்களானது பெரும்பாலும் மேலோட்டமானவையாகவே இருந்தன. இவர் காஞ்சியின் உள்ளூர் ஆட்சியாளராகவே நீடித்தார். இவரது சம காலத்தவர்கள் மூன்றாம் இராசேந்திரன், சாடவர்மன் சுந்தர பாண்டியன், கோப்பெருஞ்சிங்கன், காக்கதீய கணபதி ஆகியோராவர்.

இவரது இரண்டாம் ஆட்சியாண்டு முதல் 31ஆம் ஆட்சியாண்டு வரையிலான அதாவது 1253 மற்றும் 1291க்கு இடையிலான காலத்திய 20 கல்வெட்டுகள்   வரதராஜ சுவாமி கோவிலில் காணப்படுகின்றன. ஆனால் இவரது இந்த நீண்ட கால ஆட்சியானது அவ்வப்போது வெளி ஆட்சியாளர்களின் குறிக்கீடுக்கு ஆளானது. உதாரணமாக காஞ்சியின் அரசராக கோப்பெருஞ்சிங்கன் 1253-1254 காலகட்டத்திலும்.  1257 மே மாதத்திலும், மீண்டும்  1260 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டார். அதே ஆண்டில் விஜய கந்தகோபாலனும் கஞ்சியின் மன்னனாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இது காஞ்சி அரசியல் செல்வாக்கில் ஏற்படும் விரைவான மாற்றங்களை காண்பிப்பிக்கும் அதேசமயம்,  ஒரே சமயத்தில் போட்டி அரசர்கள் தங்கள் ஆதரவாளர்களை தீவிரமாக ஆதரிக்கப்பதையும் காட்டுகிறது.

கி,பி, 1260இல் விஜய கந்தகோபாலனின் ஆட்சி எல்லைப்பகுதியையும் கடந்த இரண்டாம் சாடவர்மன் நெல்லூர்வரை சென்று வீராபிசேகம் செய்து கொண்டு, காஞ்சியின் அரசனாத தன்னை அறிவித்துக் கொண்டார்..

சான்றுகள்:

1.Early Inscriptions Vol 1 Authored by Subrahmanya Sastry. S, Published by TTD. Soft copy available in Archive.org [1]

2. Sri Varadarajaswami Temple, Kanchi: A Study of Its History, Art and Architecture By K.V. Raman [2]

மேற்கோள்கள் தொகு

  1. "Full text of "Early Inscriptions Vol 1"". archive.org. பார்க்கப்பட்ட நாள் 2014-10-05.
  2. Raman, K.V. (2003). Sri Varadarajaswami Temple, Kanchi: A Study of Its History, Art and Architecture. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170170266. https://books.google.com/books?id=myK8ZYEIu4YC. பார்த்த நாள்: 2014-10-05. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய_கந்தகோபாலன்&oldid=2762265" இலிருந்து மீள்விக்கப்பட்டது