விண்டோசு 8.1 (Windows 8.1) என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் இயங்குதள பதிப்பாகும். இந்தப் பதிப்பு 2013 ஆம் ஆண்டு ஆகத்து 27 ஆம் தேதி கணினி தயாரிப்பாளர்களுக்கும், அதே ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி பொதுவிலும் வெளியிடப்பட்டது. விண்டோசு 8 மற்றும் விண்டோசு ஆர்.டி. பதிப்பை பயன்படுத்திக் கொண்டு இருந்தவர்களுக்கு இந்தப் பதிப்பு இலவச மேம்பாடக விண்டோசு ஸ்டோர் வழியாக வழங்கப்பட்டது.

விண்டோசு 8.1
விருத்தியாளர்மைக்ரோசாப்ட்
ஓ.எஸ். குடும்பம்மைக்ரோசாப்ட் விண்டோசு
உற்பத்தி வெளியீடுஅக்டோபர் 17, 2013; 10 ஆண்டுகள் முன்னர் (2013-10-17)
இற்றை முறைவிண்டோஸ் அப்டேட்
ஆதரிக்கும் தளங்கள்IA-32, x86-64, and எ ஆர் எம்(ARM) கட்டமைப்பு
கருனி வகைஹைப்ரிட் கேர்நெல் (Hybrid)
அனுமதிதனியுரிமை மென்பொருள்
முன்னையதுவிண்டோசு 8 (2012)
பிந்தியதுவிண்டோசு 10 (2015)
அதிகாரப்பூர்வ
வலைத்தளம்
windows.microsoft.com

விண்டோசு 8 இயங்குதளத்தை பயன்படுத்தியவர்களின் புகார்களைக் களையும் வகையில் இந்தப் பதிப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யபட்டிருந்தன. அதன் காரணமாக இந்தப் பதிப்பு வெளிவந்த போது விண்டோசு 8ஐ காட்டிலும் பரவலாக நல்ல விமர்சனங்களியே பெற்றது. எனினும் முந்தைய பதிப்பின் தொடர்ச்சியான மெட்ரோ வகை செயலிகளின் காரணமாக பல எதிர்ப்புகளையும் பதிவு செய்து கொண்டது. செப்டம்பர் 2019 கணக்கின்படி உலகில் 5.53% விண்டோசு தளத்தில் இயங்கும் கணினிகள் இந்தப் பதிப்பைக் கொண்டுள்ளன.[1]

வரலாறு தொகு

தொடுதிரைகளை முதன்மையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இயங்குதளமான விண்டோசு 8 எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அது கற்றுக்கொடுத்த பாடங்களைக் கொண்டு தனது அடுத்த பதிப்பை தயாரிக்கத் தொடங்கிய மைக்ரோசாப்ட், அதற்கு புளூ என்று புனைபெயர் வைத்திருப்பதாக 2013 தொடக்கத்தில் செய்திகள் வெளிவந்தன. மேலும் சில ஆண்டுகளுக்கு ஒரு மேம்படுத்துதல் என்ற உத்தியில் இருந்து மாறி தொடர்ச்சியான மேம்படுத்தல்களை கொண்ட இயங்குதளமாக இந்த புதிய பதிப்பு இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவித்தன.[2][3]

2013 சூன் மாதம் மைக்ரோசாப்ட், தனது வருடாந்திர நிகழ்வான பில்ட் கலந்தாய்வில் விண்டோசின் அடுத்த பதிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. விண்டோசு 8.1 என்று பெயரிடப்பட்ட இந்தப் பதிப்பு அன்றே பொதுச் சோதனைக்காக வெளியிடப்பட்டது. தொடர்ந்து இதன் முழுமையடைந்த பதிப்பு கணினி தயாரிப்பாளர்களுக்கு ஆகத்து 27 ஆம் தேதியும், பொதுமக்களுக்கு அக்டோபர் 17 ஆம் தேதியும் வெளியிடப்பட்டது.

மேம்பாடு தொகு

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், விண்டோசு 8.1 மேம்பாடு என்னும் ஒரு பதிப்பை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. விண்டோசு 8.1 இயங்குதளப் பதிப்பில் அதுவரை வந்திருந்த அனைத்து மேம்பாடுகளையும் ஒருங்கிணைத்து மேலும் சில புதிய அம்சங்களையும் இது கொண்டிருந்தது. விண்டோசு 8 பயனர்களுக்கு ஸ்டோர் மூலமாக 8.1ஐ வழங்கியதைப் போல் அல்லாமல் இந்த முறை சாதாரண விண்டோசு அப்டேட் மூலமாகவே இந்தப் பதிப்பு வழங்கப்பட்டது.[4]

சிறப்பு அம்சங்கள் தொகு

விண்டோசு 8 பயனர்களின் முக்கிய பிரச்சனையாக இருந்தது முற்றிலும் மாற்றப்பட்ட தொடுதிரைக்கான பயனர் இடைமுகம். எனவே இந்தப் பதிப்பில் பெரும்பாலான மாற்றங்கள் பயனர் இடைமுகத்தை மேம்படுத்துவதை நோக்கியே இருந்தன.

விண்டோசு 8இன் கைப்பேசி பதிப்பைப் போலவே விண்டோசு 8 பதிப்பிலும் புதிதாக நிறுவப்படும் செயலிகள் தானகவே முகப்பு பக்கத்தில் இடம்பெறும். தற்போது இது மாற்றப்பட்டு, அனைத்து செயலிகள் என்ற புதிய பக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பக்கத்தை முகப்பு பக்கத்தின் கீழிருக்கும் திசை காட்டும் குறியை அழுத்துவதன் மூலமாகவும், விசைப்பலகையில் இருக்கும் கீழ் நோக்கிய குறியை அழுத்துவதன் மூலமும் அடையலாம். தொடுதிரை கணினி எனில் முகப்புப் பக்கத்தை கீழிருந்து மேலாக தள்ளுவதன் மூலமும் இந்தப் பக்கத்தை திறக்க முடியும்.

வரவேற்பு தொகு

பெரும்பான்மை நேர்மறை விமர்சனங்களுடன் வெளியானாலும் விமர்சகர்கள் இந்தப் பதிப்பை முழுமையடைந்ததாகக் கருதவில்லை. தொடுதிரைகளை முதன்மைப் படுத்திய விண்டோசு 8இன் சார்பு பல இடங்களில் இருந்ததால் விசைப்பலகை கொண்டு இயக்க சிரமமாக இருப்பதாகவே பலரும் கருதினர்.[5] பல நிறுவங்களும், தங்கள் கணினிகளில் இந்தப் பதிப்பைத் தவிர்த்து, இதன் அடுத்த பதிப்பான விண்டோசு 10க்கு நேரடியாக புதுப்பித்துக் கொண்டனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Desktop Windows Version Market Share Worldwide". StatCounter Global Stats (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  2. "Is 'Windows Blue' a set of coordinated updates for all Microsoft products?". PCWorld (in ஆங்கிலம்). 2013-02-08. பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  3. Foley, Mary Jo. "Microsoft's 'Blue' wave is coming to more than just Windows". ZDNet (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  4. "Windows 8.1 Update is required for future Windows 8.1 patches". PCWorld (in ஆங்கிலம்). 2014-04-08. பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  5. Warren, Tom (2013-10-17). "Windows 8.1 review". The Verge (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோசு_8.1&oldid=3448452" இலிருந்து மீள்விக்கப்பட்டது