விண்ட்சர் நடவடிக்கை

விண்ட்சர் நடவடிக்கை (Operation Windsor) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைத் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக கனடியப் படைகள் கான் அருகே இருந்த காப்பிரிக்கே நகரையும் அதன் விமான ஓடுதளத்தையும் கைப்பற்றின.

விண்ட்சர் நடவடிக்கை
கான் சண்டையின் பகுதி
Bombcarpiquet.jpg
காப்பிரிக்கே விமான தளத்தின் மீது பிரிட்டானிய வான்படை விமானங்கள் எறிகணை வீசி தாக்குகின்றன
நாள் 4–5 ஜூலை 1944
இடம் காப்பிரிக்கே, Normandy, France
கீழ்நிலை உத்தியளவில் ஜெர்மானிய வெற்றி
மேல்நிலை உத்தியளவில் நேச நாட்டு வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
காப்பிரிக்கே கனடியப் படைகளால் கைப்பற்றப்பட்டது
பிரிவினர்
 கனடா  நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
கனடா ராட் கெல்லர் நாட்சி ஜெர்மனி கர்ட் மேயர்
பலம்
4 காலாட்படை பட்டாலியன்கள்
1 எந்திரத் துப்பாக்கி பட்டாலியன்
2 கவச ரெஜிமண்ட்கள்
1 எஸ். எஸ் பான்சர் கிரெனேடியர் பட்டாலியன்
1 விமான் எதிர்ப்பு பீரங்கிக் குழுமம்
15 டாங்குகள்
இழப்புகள்
377 பேர்
17 டாங்குகள்
155 பேர்

பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6ம் தேதி துவங்கியது. இப்படையெடுப்பின் உடனடி நோக்கங்களில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுதல். ஆனால் ஜூன் மாதம் முழுவதும் பல முறை முயன்றும் அந்நகரை நேச நாட்டுப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. ஜூலை மாதம் கான் நகரின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. அவற்றுள் ஒன்று தான் விண்ட்சர் நடவடிக்கை. ஜுலை 4ம் தேதி 3வது கனடியத் காலாட்படை டிவிசனின் நான்கு பட்டாலியன்கள் கான் அருகே உள்ள காப்பிரிக்கே நகரைத் தாக்கின. இரு நாட்கள் சண்டைக்குப் பிறகு நகரம் கைப்பற்றப்பட்டது. ஆனால் அருகிலிருந்த விமானதளத்தைக் கனடியப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. ஜூலை 6ம் தேதி தொடங்கிய சார்ண்வுட் நடவடிக்கையில் பங்கு பெறுவதற்காகக் கனடியப் படைகள் காப்பிரிக்கே விமானதளத்தின் மீதான தாக்குதலைக் கைவிட்டன.

ஆள்கூறுகள்: 49°11′10″N 0°26′35″W / 49.186°N 0.443°W / 49.186; -0.443

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்ட்சர்_நடவடிக்கை&oldid=1358523" இருந்து மீள்விக்கப்பட்டது