விண்வெளியில் மின்கலங்கள்
விண்வெளியில் மின்கலங்கள் (Batteries in space) பொதுவாக மின் உற்பத்தி செய்வதற்குரிய ஒரு வழிமுறையாக பயன்படுத்தப்படுகின்றன. விண்வெளியில் பெரும்பாலும் வேதியியல் மின்கலங்கள் பயன்படுகின்றன. வெவ்வேறு பண்புகள் கொண்ட வேதிப்பொருட்களிடையே மின்னழுத்தத்தை உருவாக்குவதன் மூலமாக மின்கலங்கள் விண்வெளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. வெளியில் இருந்து செலுத்தப்படும் மின்சாரத்தை மறுமின்னூட்டம் செய்யவல்ல மின்கலங்களால் சேமித்துக் கொள்ள முடியும், இதனால் இவ்வகை வேதிப்பொருட்களுக்கு இடையில் மீள்வினை நிகழ்கிறது. இங்குள்ள அட்டவணையில் விண்வெளியில் பயன்படும் பொதுவான சிலவகை மின்கலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மின்கல வகை type | வாய்ப்பாடு | குறிப்பிட்ட ஆற்றல் (வாட்டு*மணி)/கி.கி |
குறிப்பு |
---|---|---|---|
ஐதரசன் எரிபொருள் மின்கலம் | H | 275 | [2] |
இலித்தியம்–கந்தக டைஆக்சைடு | LiSO2 | 200 | [2] |
இலித்தியம்–தயோனைல் குளோரைடு | LiSOCl2 | 200 | [2] |
இலித்தியம்-தயோனைல் குளோரைடில் புரோமின் | Li-BCX | [3] | |
இலித்தியம்-இரும்பு இருசல்பைடு | LiFeS2 | [4] | |
நிக்கல்–காட்மியம் | NiCd | 30 | [2] |
நிக்கல்–ஐதரசன் | NiH2 | 60 | [2] |
சோடியம்-கந்தகம் | Na-S | [3] | |
வெள்ளி-காட்மியம் | Ag-Cd | [3] | |
வெள்ளி– துத்தநாகம் | AgZn | 100 | [2] |
துத்தநாகம்-பாதரச ஆக்சைடு | Zn-HgO | [3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Hubble Space Telescope Servicing Mission 4 Batteries
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Ball, et al. - Planetary Landers and Entry Probes - Page 102
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 G. Halpert, et al.- Batteries and Fuel Cells in Space
- ↑ J. Jeevarajan - Comparison of Safety of Two Primary Lithium Batteries for the Orbiter Wing Leading Edge Impact Sensors