விண்வெளி நடை
விண்வெளி நடை (Spacewalk) என்பது ஊர்திக்கு வெளியேவான செயல்பாடுகள் (Extra-vehicular activity (EVA)) என்றும் அழைக்கப்படுகிறது. இது பூமியின் வெளியேயான விண்வெளியில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களால் செய்யப்படும் ஒரு நடவடிக்கை ஆகும். இவை பெரும்பாலும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளியே நடைபெறுகின்றன. சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்பாகங்களில் ஏற்படும் இயந்திரக் குறைபாடுகளை நிவிர்த்தி செய்யவோ அல்லது புதிய பாகங்களை இணைக்கவோ இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்நடவடிக்கையின் போது விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் முற்றிலும் தொடர்பின்றி இருக்க மாட்டார்கள்[1]. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் தங்களின் விண்வெளி வீரர்கள் விண்வெளி நடையைச் செய்ய முடியும் என நிருபித்துள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ NASA (2007). "Stand-Up EVA". NASA. பார்க்கப்பட்ட நாள் October 21, 2008.