விதை சான்றளிப்பு
விதைச் சான்றளிப்பு என்பது விதை சட்டம் 1966 இன் கீழ் தமிழக அரசு விதைச் சான்றளிப்புத் துறையால் ஏற்படுத்தப்பட்ட சட்டமாகும். இதன் வழியாக மரபியல் தூய்மை விதைகளின் அகத் தூய்மை, புறத் தூய்மை கொண்ட தரமான விதைகளை உழவருக்குத் தர முடிகிறது. மத்திய, மாநில அரசுகளின் தரமான விதைகளுக்கான தர நிர்ணயம் செய்து விதைகளை வகைப்பாடு செய்து அதன் வழியாக விதை வழங்கல் நிறுவனங்களை கட்டுப்படுத்துகிறது. மாநில விதைச் சான்றளிப்பு நிறுவனம் விதை வழங்கல் நிறுவனங்களின் விதைகளுக்கு சான்றளிப்பு பணியினை மேற்கொள்கிறது. [1]
விதை வகைகள்
தொகு- கரு விதை
- வல்லுநர் விதை
- ஆதார விதை
- சான்று பெற்ற விதை
என விதை வகைகள் நான்கு வகைப்படும்
மேற்கோள்கள்
தொகு- ↑ காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக வேளாண்மை மற்றும் கால்நடை துறை சீரிய பயிர் சாகுபடி, முனைவர்.ஆர்.செந்தில்குமார்