வித்தார கவி
வித்தார கவி என்பது கவிதையால் நூல் செய்யும் புலமை
வித்தார கவி என்பது கவிதையால் நூல் செய்யும் புலமை. ஆசுகவி, மதுரகவி, சித்திரக் கவி, வித்தார கவி என்னும் பாகுபாட்டில் ஒன்று. வித்தாரம் பேசுதல் என்னும்போது வித்தாரம் என்னும் சொல் வக்கணையாகப் பேசுதல் எனப் பொருள்படுகிறது. அதுபோல வக்கணையாகப் பாடும் தொடர்நிலைச் செய்யுள் வித்தார கவியாகும். [1]
அடிக்குறிப்பு
தொகு- ↑
மும்மணிக் கோவையும் பன்மணி மாலையும்
மறமும் கலிவெண் பாட்டும் மடல் ஊர்ச்சியும்
கிரீடையும் கூத்தும் பாசண்டத் துறையும்
விருத்தக் கவிதையும் இயல் இசை நாடகத்தொடு
விரித்துப் பாடுவது வித்தார கவியே (திவாகர நிகண்டு, தொகுதிப்பாகம் 12)